தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கலைஞர்கள் விருதுகள் வழங்கப்பட்டதில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாநில அரசின் நேர்மை குறித்து திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து தற்போது நடிகர் அட்டகத்தி தினேஷ் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்

தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் 2026

2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2014 ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுமாநகரம், அறம், பரியேறும்பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கிஆகியதிரைப்படங்கள்சிறந்தபடங்களாகவும்தேர்வுசெய்யப்பட்டுள்ளன.சிறந்தநடிகர் (சிறப்புபரிசு) பிரிவில்குருசோமசுந்தரம், சந்தோஷ்ஸ்ரீராம், விஷ்ணுவிஷால்,  கார்த்தி, தருண்குமார், பசுபதி, அப்புக்குட்டிஆகியோருக்குவழங்கப்படுகிறது

இந்த விருது வென்ற பட்டியல் குறித்து பல திரை பிரபலங்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் 'தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் தினேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தனது அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார் .

வருத்தம் தெரிவித்த நடிகர் தினேஷ் 

பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் நாயகனாக அறிமுகமான தினேஷ் இந்த படத்திற்கு பின் ரசிகர்களால் அட்டகத்தி தினேஷ் என்று அறியப்பட்டார். குக்கூ விசாரணை , ஒரு நாள் கூத்து , லப்பர் பந்து , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , ஜே பேபி என பல்வேறு படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்தபடியாக பா ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படத்தில் நடித்துள்ளார். மற்ற நடிகர்களைப் போல் வழக்கமான கமர்சியல் டிராக்கில் இல்லாமல் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் இவருக்கு திரைத்துறை சார்பாக இதுவரை பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்காதது ஏமாற்றத்திற்குரிய ஒன்றே. 

2016 முதல் 2022 ஆம் ஆண்டு காலத்தில் தினேஷ் விசாரணை , ஒரு நாள் கூத்து , கபாலி , அண்ணனுக்கு ஜே , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய 5 படங்களில் தான் நடித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றது மட்டுமில்லாமல் மூன்று தேசிய விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத் தக்கது.