Watch video : விஷால் செய்த குறும்புத்தனம்.. சிரிப்பு வரவைக்கும் யோகி பாபு ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ 

Actor Vishal : நேற்று வைரலான விஷாலின் டாஸ்மாக் வீடியோவை தொடர்ந்து சமபந்தி விருந்தில் அவரின் சுட்டித்தனமான ரியாக்ஷன் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் சமீப காலமாக மாறி மாறி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்து வரும் ரகளை சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

ஹிட் அடித்த மார்க் ஆண்டனி :

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. அடுத்தடுத்து நடிகர் விஷால் படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதுடன் 100 கோடியை தாண்டியும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து சாதனை படைத்தது.

தயாராகும் ரத்னம் :

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குநர் ஹரி இயக்கும் 'ரத்னம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

சம்பந்தி விருந்தில் விஷால் :

அந்த வகையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதியான நேற்று 'ரத்னம்' படக்குழுவினருக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. அந்த சமபந்தி விருந்தில் சாப்பிட உட்கார்ந்த நடிகர் விஷால் தனக்கே உரித்தான வித்தியாசமான ஸ்டைலில் சாமி கும்பிட்டுவிட்டு  உணவில் கை வைக்கிறார். அவரின் அருகில் அமர்ந்து இருந்த யோகி பாபு அமைதியாக அதை பார்த்து விட்டு திரும்பி விடுகிறார். விஷாலின் இந்த தமாஷான வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஷாலை தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள். இது உலக மகா நடிப்புடா சாமி, தயவு செய்து இப்படி எல்லாம் பண்ணாதீங்க.. ஒரே சிரிப்பு சிரிப்பா வருது, யோகி பாபு மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்  என நான் கேட்ச் பண்ணிட்டேன் என கமெண்ட்களை போஸ்ட் செய்து வருகிறார்கள். 

டாஸ்மாக் வீடியோ :

இதே போன்ற விஷாலின் வீடியோ ஒன்று நேற்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கானது. டாஸ்மாக் வரிசையில் நின்று கொண்டு இருந்த போதை ஆசாமியை விஷால் விரட்டி அடிப்பது போல வெளியானது அந்த வீடியோ. ரத்னம் படத்திற்காக போடப்பட்ட டாஸ்மாக் செட் என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற கலாட்டாதான் அது என்றும் பின்னர் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. 

இப்படி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு விஷயத்தை செய்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறார் நடிகர் விஷால். 

Continues below advertisement