இதே வேலையா போச்சு.. என்ன அதிகாரம் இருக்கு! மிஷ்கினை கிழித்து தொங்கவிட்ட விஷால்
Vishal : இயக்குனர் மிஷ்கினுக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது.

இளையராஜா குறித்து கொச்சையாக பேசிய இயக்குனர் மிஷ்கினுக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின்:
தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட திரைப்படங்களை இயக்குனர்களுள் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் பொது மேடைகளில் நாகரீகம் இல்லாமல் கொச்சையான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். பட புரமோஷன்களில் அவரது பேச்சு சில சமயங்களில் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.
Just In




இதையும் படிங்க: Mohammad siraj: காதல் வலையில் டிஎஸ்பி சிராஜ்? அந்த பெண் தான் இந்த பெண்ணா! உண்மை என்ன?
குறிப்பாக இயக்குனர் பாலாவின் 25வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாலாவை அவன் இவன் என்று ஒருமையாக பேசியது, அதன் பிறகு பாட்டில் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவை கொச்சையான வார்த்தைகளில் பேசியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இளையராஜாவை அன்பின் மிகுதியால் அவ்வாறு பேசி இருந்தாலும் பொது மேடைக்கென்று ஒரு நாகரிகம் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
மன்னிப்புக்கேட்ட மிஷ்கின்:
இளையராஜா குறித்த தனது பேச்சுக்கு இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டிருந்தார். நகைச்சுவைக்காக தான நான் அப்படி பேசியிருந்தேன், எனது பேச்சுக்கு பாடலாசிரியர் தாமரை, நடிகர் அருள்தாஸ் ஆகியோர் நான் பேசியது தவறு என்றார்கள், அதற்காக நான் அவர்களை கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன் என்று இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிங்க: அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தும் சூப்பர் ஹிட் பட ஹீரோயின்!
விஷால் கண்டனம்:
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் பேச்சுக்கு குறித்து நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், அவருக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது. யாருக்குமே இளையராஜாவை அவன் இவன் என்று சொல்ல அருகதை கிடையாது. அந்த மனிதன் கடவுளின் குழந்தை, அவருடைய பாடல்கள் தான் நம்மை சோகத்தில் இருந்து மீளவும் நமக்கு சந்தோசத்தையும் கொடுக்கிறது. நம்முடைய இரத்தத்தில் இளையராஜா இருக்கிறார். அவரை அவன் இவன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று விஷால் தனது கண்டத்தை பதிவு செய்தார்.
ஏற்கெனவெ இயக்குனர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஷாலுக்கு இடையே துப்பறிவாளன் படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.