கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2 படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.    பொங்கல் பண்டிகைக்கு வரவிருந்த அஜித்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாமல் கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. 


பொங்கலுக்கு வரும் மதகஜராஜா:


இதையடுத்து, கிடப்பில் இருந்த பல படங்கள் பொங்கல் ரேஸில் குதித்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் விஷாலின் மதகஜராஜா படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு உருவான இந்த படம் 2013ம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. 


ஆனால், பல காரணங்களால் இந்த படம் ரிலீசாகமாலே இருந்தது. இந்த நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் தற்போது ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் சிலர் தற்போது உயிருடன் இல்லை. 

இத்தனை பேர் உயிருடன் இல்லையா?


காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு மற்றும் சீனு மோகன் நடித்திருந்தனர். இவர்கள் இன்று உயிருடன் இல்லை. பிரபல இயக்குனரும், நடிகருமான 2013ம் ஆண்டு காலமானார். பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடந்தாண்டு காலமானார். 


பிரபல நகைச்சுவை நடிகராகிய மயில்சாமியும் கடந்த 2023ம் ஆண்டு காலமானார். பிரபல நகைச்சுவை நடிகராகிய சிட்டிபாபு கடந்த 2013ம் ஆண்டு காலமானார். மூத்த நடிகரான சீனு மோகன் கடந்த 2018ம் ஆண்டு காலமானார். இவர்கள் அனைவருக்கும் சுந்தர்.சி  படத்தில் முக்கிய காட்சிகள் வழங்கியுள்ளார். 

12 வருடத்திற்குப் பிறகு ரிலீஸ்:


12 வருடங்களுக்குப் பிறகு ரிலீசாக உள்ள மதகஜராஜா மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடித் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார். மேலும், நிதின் சதீஷ், முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், லொள்ளு சபா மனோகர், முத்துக்காளை ஆகியோரும் நடித்துள்ளனர். ஆர்யா மற்றும் சதா கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். 


விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ளது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல்., ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளனர். கடும் போட்டிக்கு மத்தியில் ரிலீசாகும் இந்த படம் வெற்றி பெறுமா? இல்லை தோல்வி அடையுமா? என்று ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.