தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மாஸ் ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இமேஜை உருவாக்கி வைத்துள்ளார். விஷால் படங்கள் என்றால் குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆனால், சமீபகாலமாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க தடுமாறி வருகிறார். ஆக்சனில் வெரைட்டி காட்டினாலும், கதையில் ஒன்னுமே இல்லை பாஸ் என்று தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்
கடைசியாக இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டுமே ஹிட் படமாக அமைந்தது. வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு பக்கம் நடிகராக இருந்தாலும், மறுபக்கம் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்துகொண்டு படாத பாடு படுகிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்பு தான் திருமணம் அறிவித்த நேரமோ என்னவோ விஷாலுக்கு கட்டம் கட்டம் கட்டி காலம் அடிக்க தொடங்கிவிட்டது. ஒரு வழியாக நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விஷால் கொஞ்சம் அல்ல நிறையவே நிம்மதியாக இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
ஷாக் கொடுக்கும் நடிகர்
அடுத்ததாக ஆர்.பி.செளத்ரி சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் மகுடம் என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தில் 3 கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், மகுடம் படக்குழுவினரை ஆச்சர்யப்படும் அளவிற்கு அவரது செயல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் ஷூட்டிங்கில் மந்தமாக இருக்கும் விஷால், சின்சியாரிட்டியை கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அவர் தயாரிக்கும் படங்களிலேயே கரெக்டான நேரத்திற்கு சூட்டிங் செல்வதில்லை என்றும் கேரவனில் ரெஸ்ட் எடுப்பார் என்றே கிசுகிசுக்கப்பட்டது.
தன்ஷிகா வந்த நேரம்
ஆனால், இப்போது ஆளே தலைகீழாக மாறிவிட்டாராம். என்னது நடிகர் விஷால் தானா என்று படக்குழுவினர் வியந்து போகிறார்களாம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விஷால் மிகவும் சீரியஸாக நடித்து வருகிறார். காலை 6 மணிக்கே மேக்கப் உடன் செட்டில் இருக்கிறாராம். இதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டாலும் புது மாப்பிள்ளை கல்யாண கலை வந்திருக்கு, அதுமட்டுமா எல்லாம் தன்ஷிகா வந்த நேரம் தான் விஷால் இப்படி மாறிவிட்டார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்களாம்.