Vishal: களைகட்டிய ஆயுத பூஜை.. தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடிய நடிகர் விஷால்.. குவியும் பாராட்டு..!

தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி ஆயுத பூஜையை கொண்டாடினார் நடிகர் விஷால்

Continues below advertisement

விஷால்

செல்லமே திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர்  நடிகர் விஷால். தொடர்ந்து சண்டைக் கோழி, தாமிரபரனி, திமிரு, உள்ளிட்டப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.  தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார் நடிகர் விஷால்

Continues below advertisement

மார்க் ஆண்டனி

அண்மையில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டைம் ஃபிக்‌ஷன் ஜானரில் எடுக்கப்பட்டிருந்த மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். நடிகர் விஷால் நடித்து 100 கோடி வசூல்  செய்த படமாக மார்க் ஆண்டனி படம் மாறியுள்ளது. அமேசான் பிரைமில் அக்டோபர் 13 ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானது.
 

சமூக செயற்பாடுகள்

சினிமா தவிர்த்து திரைத்துறை சார்ந்தும் பிற சமூக நிகழ்வுகளிலுன் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகிறார் நடிகர் விஷால். சமீபத்தில் தனது 31 ஆவது  படப்பிடிப்புக்காக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சென்ற விஷாலை M.குமாரசக்கனாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தரும்படி கோரிக்கையும் வைத்தனர்.
 
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பதிலளித்த விஷால் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார். அதன்படி, தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரகாஷ், M.குமாரசக்கனாபுரம் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரிடமும் கலந்தாலோசனை செய்தார். பின்னர் அந்த பகுதி மக்கள் பலனடையும் வகையில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான  தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதுடன், தண்ணீர் தேக்கி வைக்க இரண்டு பெரிய குடிநீர் தொட்டியையும் அமைத்து தந்துள்ளார். 
 

தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை

இந்நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் நடிகர் விஷால். அவரது இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் விஷால் 34 படத்தின் அறிவிப்பு வெளியானது. விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்களை இயக்கி வெற்றி கொடுத்த ஹரி இயக்கும் Vishal 34 படத்தில் தற்போது விஷால் இணைந்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
Sponsored Links by Taboola