சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சீயான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி இருந்தது, அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிக்கைகள் தவறாகக் கூறுவதுபோல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.
இந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான தனிமையை தாருங்கள். நமது அன்பான சீயான் இப்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும், பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
1966 -ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய சேது திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
தொடர்ந்து கமர்ஷியல் பக்கம் திரும்பிவிக்ரம், ஜெமினி, தூள், சாமி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தினாலும், விமர்சன ரீதியான காசி, சாமுராய், பிதாமகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் பிதாமகன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்