32 Years of Maanagara Kaaval: 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர’ - 32 ஆண்டுகளை கடந்த விஜயகாந்தின் ‘மாநகர காவல்’
ஏவிஎம் நிறுவனத்தின் 150வது தயாரிப்பாக உருவான நடிகர் விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஏவிஎம் நிறுவனத்தின் 150வது தயாரிப்பாக உருவான நடிகர் விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படம்
Just In




1991 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படம் வெளியானது. எம். தியாகராஜன் இயக்கிய இந்த படத்திற்கு ‘மாநகர காவல்’ என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. விஜயகாந்த், சுமா, ஆனந்த ராஜ், லட்சுமி, நாசர், வைஷ்ணவி, தியாகு என பலரும் இப்படத்தில் இணைந்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படம் ஒரு அரசியல் கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். மாநகர காவல் திரையிட்ட இடமெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
படத்தின் கதை
இந்தியாவின் பிரதமராக லட்சுமி பொறுப்பேற்பது சக கூட்டணி கட்சி தலைவராக பிஜே சர்மாவுக்கு பிடிக்காமல் இருக்கிறது. அவரை தீர்த்துக்கட்ட சதி செய்கிறார். இதனிடையே டெல்லியில் தான் செய்யும் கொலையை பார்த்த சுமாவை ஆனந்தராஜ் கொல்ல முயற்சிக்கிறார். இதனிடையே சென்னைக்கு வரும் சுமா விஜயகாந்த் மீது காதல் கொள்கிறார். போலீஸ் அதிகாரியான விஜயகாந்த், வழக்கு ஒன்றில் தன்னை கைது செய்ய, அவரை பழிவாங்க தியாகு முயற்சிக்கிறார். இப்போது ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்குமே ஆபத்து காத்திருக்கிறது.
இதனிடையே ஆனந்தராஜை கைது செய்யும் விஜயகாந்த், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஆனந்தராஜை போலி போலீசார் அழைத்து செல்ல, விஜயகாந்த் மீது நிஜ போலீஸ் அதிகாரி நாசருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. செத்துப்போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் தங்கையை கண்டுபிடிக்கும் விஜயகாந்தின் , அவளின் கணவர் தான் நாசர் என அறிந்து கொள்கிறார். பின் நாசர், விஜயகாந்த் இருவரும் இணைந்து பிரதமருக்கு காத்திருக்கும் ஆபத்தை எப்படி முறியடிக்கிறார்கள் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
பஸ்களில் இன்றும் ஒலிக்கும் பாடல்கள்
சந்திரபோஸ் இசையமைத்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர’ பாடல் இன்றும் கிராமங்களில் பஸ்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலாக உள்ளது. மற்ற பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் பிரதமர் தொடர்பான காட்சிகள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை நினைவுப்படுத்துவது போல இருந்தது. அதேபோல் தன்னுடைய சினிமா கேரியரில் முக்கால்வாசி படங்களில் போலீஸ் கெட்டப்பை ஏற்று நடித்த விஜயகாந்துக்கு மாநகர காவல் படமும் முக்கிய திருப்புமுனையாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.