ஃபீனிக்ஸ் படம் பார்த்த நடிகர் விஜய்
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள ஃபீனிக்ஸ் திரைப்படம் நாளை ஜூலை 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் ஃபீனிக்ஸ் படத்தை பார்த்து சூர்யா சேதுபதியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விஜயை சந்தித்தது குறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"ஃபீனிக்ஸ் படத்தை தளபதி விஜய் அவர்கள் பார்த்து தனது மெர்சலான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்" என படத்தின் இயக்குநர் அனல் அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
" நான் உங்களை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நீங்கள் பேசிய அன்பான வார்த்தைகள் , கடைசியாக கட்டிபிடித்தது எல்லாம் எனக்கு போதுமானது. இந்த பயணத்தில் உங்களுடைய ஆதரவை பெற்றதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்" என விஜயை சந்தித்தது குறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.