தளபதி 69
விஜயின் திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகி வருகிறது தளபதி 69. கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எச் வினோத் இயக்குகிறார். மமிதா பைஜூ , பூஜா ஹெக்டே , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு விஜய் ரூ 275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாகவும் விஜயின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தளபதி 69 ரீமேக்கா ?
தெலுங்கில் பாலையா நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் தளபதி 69 என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை பலர் மறுத்தனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக உருவான படம் பகவந்த் கேசரி . இப்படத்தின் கதைக்கு ஏற்றபடியே தளபதி 69 படத்தில் விஜயின் தங்கையாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். தளபதி 69 ரீமேக் படமா இல்லை என்பது குறித்து இதுவரை படக்குழு சார்பில் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்பட்டாத நிலையில் மீண்டும் இந்த விவாதம் தொடங்கியுள்ளது
சமீபத்தில் தெலுங்கு பட ப்ரோமோஷனுக்கு சென்ற நடிகர் வி.டி.வி கணேஷ் தளபதி 69 பற்றி பேசினார் " பகவந்த் கேசரி படத்தை விஜய் 5 முறை பார்த்தார். பின் அப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடியை அழைத்து இந்த படத்தை ரிமேக் செய்யும்படி கேட்டுக் கொண்டார் ஆனால் இயக்குநர் தான் ரீமேக் செய்ய மறுத்துவிட்டார். " என வி.டிவி கணேஷ் தெரிவித்தார்.