தமிழ் சினிமாவில் அஜித்-ஷாலினி, விஜய்-சங்கீதா, சூர்யா -ஜோதிகா என சில தம்பதிகளை ரசிகர்கள் எப்போதுமே கொண்டாட தவறுவதில்லை. அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் தங்களுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். ஆனால் விஜய் அப்படியல்ல , அவர் தனது ரசிகையை திருமணம் செய்துக்கொண்டார். எப்படி தங்கள் திருமணம் நடைபெற்றது என்பது குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் விஜய் .





அதில் "பொதுவா என்னை கனடா , லண்டன் , இலங்கை அப்படினு நிறைய இடங்களில் இருந்து சந்திக்க ரசிகர்கள் வருவாங்க. நான் பொதுவா வெளிநாடுகளில் இருந்து வரும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். காரணம் அவங்க எப்போவாது வருவாங்க.. அவங்களிடம் கொஞ்சம் நேரம் செலவு செய்து பேசுவேன். உள்ளூரில் இருக்கும் ஆடியன்ஸை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படி ஒரு ரசிகையாத்தான் சங்கீதா என்னை சந்திச்சாங்க. அவங்களுடைய அத்தை இங்க இருக்காங்க. அவங்கதான் சங்கீதாவை என்னிடம் அறிமுகம் செய்து வச்சாங்க. உடனே ஆட்டோகிராஃப் , போட்டோ எடுக்கனும்னு சொன்னாங்க. நானும் சரினு சொல்லி ஃபோட்டோ எடுத்தோம்.அதன் பிறகு அவங்க கேட்டாங்க , உங்க அம்மா அப்பாவை நாங்க பார்க்க முடியுமா? , அவங்க எங்களிடம் பேசுவாங்களான்னு..உடனே நான் சொன்னேன். எங்க அம்மா அப்பா நல்லா பேசுவாங்க. நான் தான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப் அப்படினு சொன்னேன். வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேன். இரண்டு நாள் கழித்து மதிய உணவுக்கு வந்தாங்க.


அன்னைக்கு பேசிட்டு போயிட்டாங்க. அவ்வளவுதான். அதன் பிறகு காதலுக்கு மரியாதை ஷூட்டிங் முடிச்சுட்டு நான் வீட்டு வந்தேன். அப்போ என் அப்பா என்கிட்ட  கொஞ்சம் தனியா பேசனும்னு சொன்னாரு. அப்பா தனியா பேசனும்னு சொன்னாலே நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிடுவேன். ஏன்னா ஏதாவது விஷயம் இருக்கும். அப்போ அப்பா என்கிட்ட கேட்டாரு , சங்கீதா பற்றி என்ன நினைக்குற அப்படினு , நான் சொன்னேன் நல்ல பொண்ணு. அதன் பிறகு அவங்க குடும்பம் பற்றி கேட்டாரு. அதன் பிறகு உடனடியா சங்கீதாவை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாரு. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. நான் டைம் கொடுங்க யோசிச்சு சொல்லுறேன்ன்னு . அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் கேட்டாங்க. நான் உங்க விருப்பம்னு சொல்லிட்டேன். ஏன்னா என் அம்மா அப்பா எனக்கு எவ்வளவோ செஞ்சுட்டாங்க. அவங்களுக்காக நான் இதை மட்டும்தான் செய்ய முடியும். லண்டன் போயிட்டு நிச்சயம் பண்ணலாமனு கேட்டாங்க. ஆனால் திருமணம் இரண்டு மூன்று வருடங்கள் ஆகட்டுனு சொல்லித்தான் நிச்சயம் பண்ணோம். “ என பகிர்ந்திருக்கிறார் விஜய் .