மகன் மீது சத்தியம் செய்த விஜய் சேதுபதி
தலைவன் தலைவி படத்தின் வெற்றியை படக்குழுவினர் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொண்டாடினார். தனக்கு தனது மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டை குறித்து நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். " எனக்கு திருமணம் ஆன புதிதில் நான் சினிமாவிற்கு முயற்சி செய்வது என் மனைவிக்கு தெரியாது. ஒருமுறை அவருக்கு எனக்கும் சண்டை வந்தபோது ஓடிக் கொண்டிருக்கும் பைக்கில் இருந்து அவர் இறங்கிவிட்டார். பிறகு அவரை பேசி சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிப்போனேன். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஆடிஷனுக்காக என்னுடைய நிறைய புகைப்படங்களை பிரிண்ட் போட்டு வைத்திருப்பேன். அதை அவர் ஒரு முறை பார்த்து கோபித்துக் கொண்டு அவர் அம்மா வீட்டிற்கு போய்விட்டார். பின் வயிற்றில் இருந்த குழந்தை மீது சத்தியம் செய்து இனி சினிமாவிற்கு போகமாட்டேன் என்று சொன்னேன். என் மகன் இப்போது ஹீரோவாகவே ஆகிட்டான்" என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியான தலைவன் தலைவி திரைப்படம் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு , தீபா சங்கர் , ரோஷினி ஹரிபிரியா , செம்பன் வினோத் , ஆர்.கே சுரேஷ், அருள்தாஸ் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். கணவன் மனைவி இடையிலான கருத்து மோதல்களை மையமாக வைத்து நகைச்சுவையாக உருவாகியுள்ள இப்படம் குடும்ப ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதியின் முந்தைய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் பெரியளவில் வசூல் எடுக்கவில்லை. அந்த வகையில் தலைவன் தலைவி படம் அவருக்கு கமர்சியல் வெற்றியைக் கொடுத்துள்ளது
தலைவன் தலைவி வசூல்
தலைவன் தலைவி திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 4.5 கோடி வசூலித்தது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரவே இரண்டாவது நாளில் ரூ 7.25 கோடியும் மூன்றாவது நாளில் ரூ 9.02 கோடியும் வசூலித்துள்ளது. மொத்தம் மூன்று நாட்களில் தலைவன் தலைவி திரைப்படம் ரூ 20.77 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.