தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன், மனைவியாகிய இவர்கள் இருவரும் இயக்கிய விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆகும்.
இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனும், வேதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றில் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இருவரும் கூறியிருப்பதாவது,
மாதவன் வந்தது எப்படி?
ஓரம்போ, வ குவார்டர் கட்டிங் படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் முன்பணம் கொடுக்கத் தயாராகவே இருந்தனர். ஆனால், இப்போது வரை நாங்கள் படப்பிடிப்பு உறுதியாகும் வரை நாங்கள் முன்பணம் வாங்கமாட்டோம். எங்களுக்கு அது கமிட்மென்ட்.
ஹோட்டல், ஆபீஸ்க்கு இன்டிரியர் டிசைன் வேலை எல்லாம் பார்த்துள்ளோம். மாதவன் சுதா இயக்கத்தில் இறுதிச்சுற்று நடித்திருந்தார். அந்த படத்தில் நான் எக்ஸ்க்யூடிவ் தயாரிப்பாளராக நான் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர் சசி வேறு பட பணியில் வேலையாக இருந்தார். அப்போது, தயாரிப்பாளர் சசிதான் மாதவனிடம் கேட்கலாம் என்று சொன்னார்.
தயாரிப்பாளரின் நம்பிக்கை:
அந்த சமயம் மாதவன் திரையுலகை விட்டே வெளியே போயிருந்தார். சசிக்கு இறுதிச்சுற்று படம் ஓடாவிட்டால் ஒய் நாட் ஸ்டூடியோ படம் பண்ணுமா? என்ற நிலையில் இருந்தபோது, அவருக்கு சுதா, இறுதிச்சுற்று மீது நம்பிக்கை இருந்தது. நமக்கு மாதவன் இந்த படத்தில் இருப்பது மிகப்பெரிய பலமாகும் என்றார். மாதவனிடம் கதை சொன்னோம். மாதவனும் சரி என்று கூறவிட்டார்.
நடிக்க மறுத்த விஜய் சேதுபதி:
விஜய் சேதுபதி எங்கள் அலுவலகத்திற்கு வந்தார். நாங்கள் கதாபாத்திரம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவர் முடித்துவிட்டு கிளம்பும்போதுதான் படம் பண்ண வேண்டாம் என்று சொல்லத்தான் வந்தேன். நான் இதை பண்ணவில்லை என்று சொல்லத்தான் அவர் வந்தார். கதையை கேட்ட பிறகு நான் பண்றேன் என்றார்.
தாடி வளர்ந்த பிறகு ஒரு பாகம் ஷுட் பண்ணுவோம். அவர் ஷேவ் பண்ணிட்டு வேறு படம் பண்ணுவார். அதற்குள் தாடி வளரவும் அடுத்து ஷுட் பண்ணுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
திருப்புமுனை:
2017ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நடிகர் மணிகண்டன் வசனம் எழுதியுள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். 11 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இந்த படம் ரூபாய் 60 கோடி வசூலை குவித்தது.
ரவுடி - போலீஸ் மோதல் கதையாக இந்த படம் உருவாகியிருக்கும். இந்த படம் விஜய் சேதுபதி திரை வாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை உருவாக்கியது.
