நானும் என் மருமகளும் நல்ல ஃப்ரண்ட்ஸ் என்று ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர் கூறியிருக்கிறார். மாமியார், மருமகள் என்று சொல்வதைவிட நல்ல ஃப்ரெண்ட்ஸ் என்று தான் எங்களைச் சொல்ல வேண்டும் என்று அந்தப் பேட்டியில் அவர் மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். 


நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் முறைப்படி இசை பயின்றவர். தமிழ்த் திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடியுள்ளர். இவரது சகோதரர்களில் ஒருவரான எஸ்.என்.சுரேந்தர் சிறந்த பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார்.


இந்நிலையில் சோபா சந்திரசேகர் அளித்த ஃப்ளாஷ்பேக் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதில் அவர் கூறியிருப்பதாவது:


மாமியார், மருமகள் என்று சொல்வதைவிட நல்ல ஃப்ரெண்ட்ஸ் என்று தான் எங்களைச் சொல்ல வேண்டும். வீட்டையும் குழந்தைகளையும் பராமரிப்பதில் சங்கீதாவைப் போல் யாரையும் பார்க்க முடியாது. அவருக்கு வீடு, குழந்தைகள் தாண்டி எதுவும் தெரியாது.  அவர் நல்ல மருமகள்.


என் பேரப் பிள்ளைகளுக்கு எங்கள் மீது அலாதி பிரியம். சஞ்சய் மிகவும் அமைதியான பையன். அவரும் அவரது சகோதரியும் பேசிக் கொள்வது கூட அமைதியாகத் தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். விஜய்யின் மகள் திவ்யா சாஷா.


வாரிசை எதிர்பார்க்கும் ரசிகர்கள்:


நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்குப் பிறகு  இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. முன்னதாக நடிகர் விஜய் ரா ஏஜெண்டாக நடித்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. திரைக்கதையில் பல சொதப்பல் இருந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது பீஸ்ட். இந்த நிலையில் வம்சி இயக்கத்தின் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.  ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.