தளபதி 69


விஜயின் சினிமா கரியரில் கடைசி படமாக உருவாகி வருகிறது தளபதி 69 திரைப்படம். எச் வினோத் இப்படத்தை இயக்குகிறார். கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கத்தி ,  மாஸ்டர் , லியோ படத்திற்கு பின் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதன் பின் படக்குழுவினர் அறிவிக்கப்பட்டு படத்தின் பூஜை அக்டோபர் 4 ஆம் தேதி  நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியது. பாபி தியோல் , பூஜா ஹெக்டே , பிரகாஷ் ராஜ் , மமிதா பைஜூ , நரேன் , கெளதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.


முதற்கட்டமாக தளபதி 69 படத்தில் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விஜயின் கட்சி  மாநாடு முடிந்த பின் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


எக்ஸ் போலீஸாக விஜய்


இப்படத்திற்கு பிறகு விஜய் முழுக்க முழுக்க சினிமாவை விட்டு அரசியல் களத்திற்கு வரவிருக்கிறார். இதனால் இந்த படம் அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு கதைக்களமாக இருக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்போல் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமைந்தது. தற்போது இப்படத்தில் விஜய் ஒரு முன்னாள் காவல் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எச் வினோத் இயக்கிய தீரன் திரைப்படம் ஒரு சிறப்பான காப் ஸ்டோரியா உருவானது. தற்போது இந்த படமும் அதே மாதிரியான ஒரு கதைக்களத்தை மையப்படுத்தி இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் எச் வினோத் படத்தின் நாயகனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனால் ரசிகர்கள் கொஞ்சம் நம்பிக்கையாக இருக்கலாம்