சப்போஸ் உன்ன காதலிச்சு, சப்போஸ் நானும் எனை மறந்து என்ற பாடலைக்கேட்டதும், இரவு 12 மணிக்கு வந்து உங்களின் காதலிக்கிறேன் என விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தெரிவித்ததாக, அவரின் இவரின் வேடிக்கையானக் காதல் அனுபவங்களைப் பகிர்கின்றனர் நடிகர் விஜய்யின் பெற்றோர்கள்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னதாக ஒலிப்பொறியாளராகப் பணிபுரிந்துவந்தார். பின்னர் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்ததும் தன் திறமைகளைத் திறம்பட வெளிப்படுத்தினார். கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாக சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு டிஸ்யூம், காதலில் விழுந்தேன், உத்தமபுத்திரன், எமன், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் இசையமைத்துள்ளார். இசைத்துறை மட்டுமின்றி கதாநாயகனாவும் மக்களிடம் பிரபலமாகிவருகிறார் விஜய் ஆண்டனி.



இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்தப்போதிலும், தன் காதல் மனைவி பாத்திமாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நடிப்பில் இறங்கியதாவும், அவரது மனைவியும் அவருக்கு ஏற்றார் போல் கதைகளை தேர்வு செய்து கொடுப்பார் என்ற தகவல் அனைவருத் அறிந்ததே. மேலும் தான் இந்த அளவிற்கு வருவதற்குக் காரணம் என்னுடைய மனைவி தான் என எப்போதும் கூறுவார் விஜய் ஆண்டனி. இதோடு தன் கணவர் நடித்துள்ள படங்களை இதுவரை பாத்திமா தான் தயாரித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


இப்படி கணவரையும், மனைவியும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனியின் காதல் ரொம்ப சுவாரஸ்சிமானது என்று தெரிவித்ததோடு இவரின் காதல் வாழ்க்கையின் வேடிக்கையான பக்கத்தை நடிகர் விஜய் பெற்றோர்களான சந்திரசேகரும், ஷோபாவும் பகிர்ந்துள்ளனர். முதலில் ஷோபா கூறுகையில் சுக்ரன் திரைப்படத்திற்கு பிறகு பல பாடல்களை ஆண்டனி இசையமைத்திருந்தாலும், நெஞ்சாஞ்கூட்டில் நீயே நிற்கிறாய் பாடல் மற்றும் சப்போஸ் உன்ன காதலிச்சு, சப்போஸ் நானும் எனை மறந்து பாடலைக்கேட்டதும், பாத்திமா இரவு 12 மணிக்கு விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து உங்களைக் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அப்ப பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அம்மாகிட்ட ரொம் கெஞ்சி பாத்திமாவைத் திருமணம் செய்துக்கொண்டார் விஜய் ஆண்டனி  என கூறினார்.


இதனையடுத்து சந்திரசேகர் கூறுகையில், இந்த காலத்தில் மனைவியை செல்லமாகவும், கணவரை மாமா என்று அழைப்பதும் அரிதான ஒன்றுதான். ஆனால் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமாவை பட்டு என்றும், பாத்திமா கணவரை மாமா என்று அழைப்பதைப் பார்க்கும்போது இருவருக்கிடையே உள்ள புரிதல் மற்றும் நெருக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இவர்களின் வாழ்க்கையைப்பார்க்கும்போது நம்பிக்கை வைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.



மேலும் தனது மனைவி குறித்து விஜய் ஆண்டனி கருத்துக்களைப் பகிர்கையில், அம்மாவிற்கு பிறகு என்னை வழிநடத்திச்செல்வது என்னுடைய மனைவி பாத்திமா எனவும் இவர் தன்னுடைய இரண்டாவது அம்மா எனவும் தெரிவித்துள்ளார். என்னுடைய வாழ்க்கையில் அழகாக வழிநடத்திச்செல்வதாக காதல் மனைவியின் சிறப்புகளைக் கூறியுள்ளார்.