தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், தவெக தலைவருமான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படமான இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. 

Continues below advertisement

செல்ல மகளே வரிகள்:

இதில் இடம்பெற்றுள்ள செல்ல மகளே என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. அதன் வரிகளை கீழே காணலாம். 

கோடி நிலவுகள் வரும் அழகே...கோடி கவிதைகள் தரும் பொருளே..கோடி வரம் எல்லாமே..ஒரு பிள்ளை ஆனதே..

Continues below advertisement

சிறு சிறு சிறு கண்ணாலே..என்னை வாழச் சொல்லுதே..கண்ணே.. மணியே.. கண்ணிமையே...என் கைக்குள்ள மலர்ந்தவளே..

எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈன்றாத என் உயிரே...

நீதானே எனக்கெல்லாமே...என் செல்ல மகளே..கண்ணே.. மணியே.. கண்ணிமையே..என் கைக்குள்ள மலர்ந்தவளே...

உன்ன நீங்காது என்னோட கால்கள்...உன்ன கொண்டாட உண்டான தோள்கள்..சிறு விழியால் கத.. கதையாய்..நீ பேச வேணும்..உலகத்துக்கே கதை படைப்போம்..நீயும்.. நானும்..

கேக்காமலே உனக்கென தரஉயிர் இருக்கு..கண்ணே.. மணியே.. கண்ணிமையே...என் கைக்குள்ள மலர்ந்தவளே...

எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்நான் ஈன்றாத என் உயிரே..

நீதானே எனக்கெல்லாமே...என் செல்ல மகளே..

கண்ணே மணியே கண்ணிமையே..என் கைக்குள்ள மலர்ந்தவளே...

நீதானே எனக்கெல்லாமே..என் செல்ல மகளே...

கண்ணே மணியே.. கண்ணிமையே...என் கைக்குள்ள மலர்ந்தவளே...

எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈன்றாத ..

இந்த பாடலை படத்தின் கதாநாயகனான நடிகர் விஜய்யே பாடியுள்ளார்.

ட்ரெண்டிங்கில் செல்ல மகளே:

இந்த பாடல் தற்போது யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஜய்யின் கடைசி படமான இந்த படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், மோனிஷா ப்ளெஸ்ஸி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. நாளை மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.