புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் 100 ஆவது பிறந்தநாளை வாழ்த்தி நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சத்ய சாய் பாபாவுடன் தனது இளம் வயது புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜூன் ரெட்டி , கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் தேவரகொண்டாவுக்கு அண்மையில் வெளியான படங்கள் தொடர் தோல்விகளாக அமைந்துள்ளன. கடைசியாக அவர் நடித்து வெளியான கிங்டம் திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி சுமாராக ஓடியது.
புட்டர்பர்த்தி சாய் பாபாவுடன் விஜய் தேவரகொண்டா
பகவால் ஶ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்து வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் புட்டபர்த்தி வந்து சேர்ந்துள்ளனர். புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் 100 ஆவது பிறந்தநாளை வாழ்த்தி நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவாமி . நான் ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது எனக்கு "விஜய் சாய்" என்ற பெயரை வைத்தீர்கள். இந்த பெயருக்கு ஏற்றபடி நான் தினமும் வாழ முயற்சிக்கிறேன். உலகத்திலிருந்து விலகி, எங்களுக்குப் பாதுகாப்பான சூழலைக் கொடுத்தீர்கள், அங்கு நாங்கள் எங்கள் கல்வியைப் பெற்றோம், பல நினைவுகளை உருவாக்கினோம். நாங்கள் அனைவரும் எப்போதும் உங்களைப் பற்றி சிந்திக்கிறோம், நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும். உலகிற்கு எங்களால் முடிந்ததைச் செய்ய நீங்கள் எங்களிடம் மன உறுதியைக் கட்டமைத்தீர்கள், ஏனென்றால் எங்களுக்குத் தேவைப்படும்போது நாங்கள் நிறைய பெற்றோம், அது எங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை அறிந்திருக்கிறோம் . 100வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்." என அவர் பதிவிட்டுள்ளார்.