விஜய் அறிமுகம் ஆன நேரத்திலிருந்து தனது படங்களில் பாடி வருகிறார். அப்போது அவர் பாடல் வரும் போது, திரையில் ஒரு வாசகம் வரும். ‛இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்பது தான் அந்த வாசகம். அப்போது பார்ப்பவர்களுக்கு அது வேடிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், உண்மையில் இன்று அவர், நம் விஜய் தான். விஜய் என்கிற நடிகனுக்கு பாடகர் என்கிற ரசிகர் பட்டாளமும் உண்டு. பிரபல பாடகியான தாய் ஷோபாவின் வளர்ப்பில், அவரது குரல் வளம் விஜய்க்கு உண்டு. இளமையிலேயே பாடலில் ஆர்வமும், அனுபவமும் கொண்டவர் விஜய். அதனால் தான் சினிமாவில் அவரால் எளிதில் பாட முடிந்தது. விஜய் தனது படங்களில் எத்தனையோ பாடல்களை பாடியிருக்கிறார். இன்னும் பாடி வருகிறார். அவற்றில் சிறந்த 10 பாடல்களை உங்களுக்காக தேர்வு செய்து இந்த வரிசை படுத்துகிறது ஏபிபி நாடு. இதில் சில பாடல்கள், அவர் நடிக்காத அதே நேரத்தில் அவர் தந்தை இயக்கி பிற நடிகர்களுக்காக அவர் பாடிய பாடல்களும் உண்டு. அவையும் ஹிட் ஆகியிருக்கின்றன. விஜய் நடிப்பை போலவே அவரது குரலுக்கும் இங்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதனால் தான் விஜய் மாஸ்! இனி உங்கள் விஜய் பாடுவார்....
1.தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா...
விஷ்ணு திரைப்படத்தில்....
2.ஓ... பேபி பேபி...
காதலுக்கு மரியாதை படத்தில் இசைஞானி இசையில்
3.மௌரிய மௌரிய... மனசுக்குள்ள வாறீயா...
பிரியமுடன் படத்தில் இசைத் தென்றல் தேவா இசையில்....
4.நிலவே நிலவே நிலவே நில்லு...
நிலாவே வா படத்திற்காக விஜய் பாடிய பாடல்...
5.நான் தம்மடிக்கிற ஸ்டைல பார்த்து...
விஜய் நடிக்கவில்லை என்றாலும் தன் தந்தை இயக்கிய படம் என்பதால் பாடியிருப்பார்...
6.மிசிசிப்பி நதி குலுங்க குலுங்க...
ப்ரியமானவளே படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் விஜய் பாடிய பாடல்
7.உள்ளத்தை கிள்ளாதே... கிள்ளிவிட்டு...!
டி.இமான் இசையில் தமிழன் படத்தில் விஜய் பாடிய பாடல்
8.கொக்கோ கோலா பிரவுன் கலருடா...
பகவதி படத்தில் தேவா இசையில் விஜய் பாடிய பாடல்...
9.கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன்...
துப்பாக்கி படத்தில் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் விஜய் பாடிய பாடல்...
10.செல்ஃபி புள்ள....
கத்தி படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல்...
இது போல் இன்னும் பல பாடல்கள் விஜய் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை நடிகராக மட்டுமல்லாது, பாடகராகவும் புதுப்பித்து வருகிறார் விஜய்.