கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு பூரண குணமடைந்தார். 


வடிவேலு முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் வீடு திரும்பியதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் கூறியுள்ளது. மக்கள் ஆசிர்வாதத்தால் கொரோனாவில் இருந்து  மீண்டு தான் நலமாக இருப்பதாகவும், 3 நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் தன்னிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நன்றி என்றும் வடிவேலு கூறியுள்ளார்.


நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அப்படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்து இசையமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அப்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதனை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.




இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் விடுதி (மில்லியன் டே) ஒன்றின் உரிமையாளரும், நடிகர் வடிவேலுவின் மிக நெருங்கிய நண்பருமான அப்துல் காதர் மைதீன் என்பவரின் விடுதியினை நட்பின் காரணமாகவும் அவர்மீது கொண்ட அன்பினால் அந்த தனியார் விடுதியை வடிவேலுவே நேரில் வந்து திறந்து வைத்தார். வடிவேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வருந்தியவர். நடிகர் வடிவேலு விரைவில் குணம் அடைய வேண்டும் என்பதற்காக சீர்காழியில் உள்ள அன்பாலயம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒருநாள் மூன்று வேளையும் உணவு வழங்கினார்.


அதனை தொடர்ந்து அன்பாலயத்தில்  நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அந்த குழந்தைகள் அனைவரும் இறை பாடல் பாடி, தொழுது, நடிகர் வடிவேலு விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர் . இந்த சிறப்பு பிரார்த்தனையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் நிர்வாகிகளும் பங்கேற்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண