இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய “உச்சினியென்பது” கவிதை நூலை நடிகர் வடிவேலு வெளியிட்டார். 


பரியேறும் பெருமாள் , கர்ணன் போன்ற  வெற்றி படத்திற்கு பிறகு  மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்துள்ளார். இரண்டே படங்களை இயக்கியிருந்தாலும் மாரி செல்வராஜ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அதிக கவனம் பெற்றவர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் அவர் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


அதன்படி மாமனிதன் திரைப்படமும் தொடங்கி ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தன்னுடைய கவிதை நூலையும் எழுதி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். தான் எழுதிய  “உச்சினியென்பது” கவிதை நூலை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார் மாரி செல்வராஜ். அவருடைய முதல் கவிதை நூலான  “உச்சினியென்பது”வை நடிகர் வடிவேலு வெளியிட்டார். 


இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரி, ''நண்பரும் கவிஞருமான வெய்யில் அவர்களின் கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக எனது முதல் கவிதை தொகுப்பாக “உச்சினியென்பது” வருகிறது. வலுக்கட்டாயமாக பெரும் ப்ரியத்தோடு வெளியிடும் கொம்பு பதிப்பகத்திறகும் நண்பர் வெய்யிலுக்கு அத்தனை நன்றி.ஆவேசத்தோடு அவ்வப்போது நான் எழுதிய சொற்களை கவிதைகள் என கண்டுணர்ந்து அதை தொகுத்து கொடுத்த நண்பர் அகரமுதல்வனுக்கும் நன்றியும் ப்ரியமும்.



அப்புறம் வேறென்ன இந்த நூலை பற்றியும் என் வாழ்வை பற்றியும் கேட்டு தெரிந்து எனக்குள் நெருங்கி மகிழ்ச்சியோடு நூலை வெளியிட்ட நடிகர் வடிவேல் சாருக்கு நன்றியும் முத்தமும்.எனது முதல் கவிதை தொகுப்பான இந்த நூலை கலையை களத்திற்கு இழுத்து வந்த அண்ணன் பா. இரஞ்சித் அவர்களுக்கு சமர்பிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும் என்பதை குறிப்பாக தெரிவித்துள்ளார்.