மார்கோ படத்தை கைவிட்ட உன்னி முகுந்தன்
உன்னி முகுந்தன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மார்கோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. தென் இந்தியாவில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் இந்த படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டிருந்த இயக்குநர் உன்னி முகுந்தன் தற்போது தான் மார்கோ படத்தின் அடுத்த பாகங்களை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
வன்முறைக் காட்சிகளுக்கு விமர்சனம்
அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு பலர் படத்தை விமர்சித்திருந்தார்கள். தொடர்ச்சியாக படத்திற்கு நெகட்டி விமர்சனங்கள் வந்ததால் இந்த படத்தின் அடுத்த பாகத்தை தான் கைவிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மார்கோவை விட ஒரு நல்ல படத்தை தான் எடுக்க முயற்சிப்பேன். ஆனால் இந்த படத்தை சுற்றி நிறைய நெகட்டிவிட்டி இருப்பதால் இனிமேல் தான் மார்கோ படத்தை கையில் எடுக்கமாட்டேன் என அவர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது
மார்கோ
தெலுங்கில் பாகுபலி , கன்னடத்தில் கே.ஜி.எஃப் போன்ற படங்கள் பான் இந்திய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வகை படங்களுக்கு பெரிய மார்கெட் ஓப்பனாகியுள்ளது. தொடர்ந்து புஷ்பா 2 , ஜவான் , என தமிழ் , இந்தி , தெலுங்கு என எல்லா மொழிகளிலும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிகப்படியான ஆக்ஷன் , வன்முறை காட்சிகள் , ஆனாதிக்க பார்வைகள் இந்த வகை படங்களில் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக இந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
அந்த வகையில் மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான மார்கோ படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. நடிகர் உன்னி முகுந்தன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் கே.ஜி.எஃப் படத்திற்கு நிகராகவும் பல இடங்களில் கே.ஜி.எஃப் படத்தைவிடமும் அதிக வன்முறை காட்சிகளைக் கொண்ட படமாக உருவாகியது மார்க்கோ. மலையாளத்தில் வெளியான இந்த படத்திற்கு பான் இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள இப்படம் மலையாள சினிமா என்றால் எதார்த்தமான கதைக்களம் என்று நினைத்து வந்த மக்களுக்கு ஆக்ஷன் படங்களிலும் நாங்கள் தான் கிங் என காட்டியது மார்க்கோ.