பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டாம் க்ரூஸ் – அனா டி அர்மாஸ் திருமணம்
ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் டாம் க்ரூஸ் தற்போது 62 வயதை எட்டியுள்ளார். ஆனால், அவரது தோற்றத்திற்கும் வயதிற்கு சம்பந்தமே இல்லை. இளம் நடிகர்களுக்கு சவால்விடும் கர்ச்சியான தோற்றம் அசாத்தியமான ஃபிட்னஸ் என உற்சாகமாக வலம் வருகிறார். தனது படங்களில் வரும் அதிரடி காட்சிகளை சுயமாகவே செய்து வருகிறார். கட்டிடங்களில் இருந்து பாய்வது, நீருக்குள் 9 நிமிடங்கள் மூச்சை நிறுத்தி நிற்பது, பறக்கும் விமானத்தில் தொங்குவது, பைக் ஓட்டி மலையிலிருந்து குதிப்பது போன்ற அசாத்தியமான ஸ்டண்ட் காட்சிகளை செய்துள்ளார். மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ள டாம், தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆகாயத்தில் திருமணம்
ஹாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அனா டி அர்மாஸ் தனுஷ் நடித்த தி கிரே மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் அனா, கடந்த சில ஆண்டுகளாக இவரும் நடிகர் டாம் க்ரூஸூம் ஜோடியாக காணப்படுகிறார்கள். இருவரும் காதலித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியானாலும் இதுகுறித்து இருவரும் இதுவரை மனம் திறந்து பேசவில்லை. வெகு நாட்களாக டேட் செய்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானத்தில் இருந்து குதித்து மிஷன் இம்பாசிபள் பட பாணியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக கருதப்படும் அனா டி அர்மாஸை 62 வயதான டாம் க்ரூஸ் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் ரசிகர்கள் மனமுடைந்து போயுள்ளார்கள்.