மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இந்த அதிர்ச்சி சம்பவமானது ஜூஹு காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பித்தார். ஆனால் அவரது கார் ஓட்டுநர் இந்த தாக்குதலில் காயமடைந்தார். 

டைகர் ஷெராஃப் அங்குள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் வெளியேறியபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்லது. வெளிநாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளாக அறியப்படும் அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோர் பெயரில் வெளியான ஒரு சமூக ஊடகப் பதிவில், டைகர் ஷெராஃப் மீதான இந்தத் தாக்குதலுக்குப் லாரன்ஸ் பிஷ்னோய் குழு  பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

இதுதொடர்பான வீடியோவில் பேசும் அனில் பண்டிட், “எங்கள் உத்தரவுகளை டைகர் ஷெராஃப் கேட்கவில்லை. சல்மான் கானுடன் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பதற்காக நாங்கள் கொலை செய்யும் பட்டியலில் இருந்தார்” எனவும் கூறியுள்ளார். குஜராத்தில் சிறையில் இருக்கும் பிஷ்னோய் சல்மான் கானைக் கொலை செய்வதாகப் பலமுறை மிரட்டியுள்ள நிலையில், டைகர் ஷெராஃப் மீதான இந்த தாக்குதல் பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

டைகர் ஷெராஃபும் சல்மான் கானும் திரையுலக பிரபலங்கள் என்பதை தாண்டி இருவரும் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. சினிமாவில் டைகர் ஷெராஃபை அறிமுகப்படுத்துமாறு தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலாவிடம் சல்மான் கான் வலியுறுத்தியிருந்தார். அதேசமயம் டைகர் ஷெராஃபின் தந்தை ஜாக்கி ஷெராஃப் சல்மான் கானுடன் பல முக்கியப் படங்களில் பணியாற்றியுள்ளார். டைகர் ஷெராஃப் பிஎம்டபிள்யூ கார் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் நானாவதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க 12 குழுக்களை போலீசார் அமைத்துள்ள நிலையில் தொடர் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.