தமிழ் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. விஜய், அஜித், சூர்யா, சிம்பு என தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் அனைவரது படத்திற்கும் இசையமைத்துள்ளார். 

Continues below advertisement

யுவன்ஷங்கர்ராஜாவை சுத்தவிட்ட சூர்யா:

இவரிடம் நடிகர் சூர்யா பற்றி கேட்டபோது, சூர்யாவை பள்ளியில் இருந்தே தெரியும். அவர் எனது பள்ளியில் சீனியர். நான் கலர் ஷு அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்வேன். என்னை சரியாக கண்டுபிடிப்பார். 3 ரவுண்ட்கள் பள்ளியைச் சுற்ற வைப்பார். அப்போது முதலே அவரைத் தெரியும். 

பூவெல்லாம் கேட்டுப்பாருக்கு இசையமைக்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். ஒரு சொந்தம், ஒரு சகோதரர் போன்ற ஒரு உணர்வைத் தரும். எதிலும் தலையிடவில்லை. நீங்க பண்ணுங்க என்று விடுவார். சுதந்திரமாக விட்டால் நாம் இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.

Continues below advertisement

இவ்வாறு அவர் கூறியிருப்பார். 

பூவெல்லாம் கேட்டுப்பார்:

95 முதல் 2020 காலகட்டம் வரையில் யுவன்ஷங்கர் ராஜா கொடிகட்டிப் பறந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் தான் சூர்யாவிற்கு முதன்முறையாக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்தார். 

அதன்பின்பு, நந்தா, மெளனம் பேசியதே, பேரழகன், வேல், அஞ்சான்,மாஸ் என்கிற மாசிலாமணி,  என்ஜிகே ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் அஞ்சான் மற்றும் என்ஜிகே ஆகிய 2 படங்கள் தவிர மற்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள் ஆகும். சூர்யாவிற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாடல்கள் ஆகும். 

ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள்:

யுவன்ஷங்கர் ராஜா சமீபகாலமாக குறைவான படங்களுக்கே இசையமைத்து வருகிறார்.  அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜாவிற்கு முதன்முதலில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். 

இதன்பின்பு, உனக்காக எல்லாம் உனக்காக, தீனா, நந்தா, துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், மெளனம் பேசியதே, புன்னகை பூவே, வின்னர், 7ஜி ரெயின்போ காலனி என்று அடுத்தடுத்து வெற்றிகரமான இசையமைப்பாளராக மாறினார். யுவன்ஷங்கர்ராஜா இசையில் தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2, ஜீவா 47, சிம்பு50, சிங்காநல்லூர் சிக்னல், மாயவலை, இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

யுவன்ஷங்கர் ராஜா கலைமாமணி விருது வாங்கியுள்ளார்.  இதுதவிர பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிகரமான  இசையமைப்பாளர்களில்  ஹாரிஸ் ஜெயராஜ் அளவிற்கு யுவன்ஷங்கர் ராஜாவும் முக்கியமானவர் ஆவார்.