பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. 


நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. வந்தியத்தேவன் எனும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த உலகமே இப்படத்திற்காக காத்திருக்கிறது. கார்த்தியின் திரைவாழ்வில் இப்படம் நிச்சயமாக ஒரு மைல் கல் தான். தலைமுறைகளையும் தாண்டியும் இந்த கதாபாத்திரம் பேசப்படும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை அனைவரும் ஆசைப்பட்ட ஒரு கதாபாத்திரம் கடைசியாக கார்த்தியை வந்து சேர்ந்துள்ளது. 


 



தீபாவளிக்கு சர்தார் : 


இந்த நிலையில் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும்  "சர்தார்" திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்தி காவல் அதிகாரியாகவும், வயதான முதியவர் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு கார்த்தி மும்மரமாக சர்தார் படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபடவுள்ளார்.  கார்த்தியின் ஜோடியாக ராஷி கண்ணாவும், ரெஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.






சர்தார் டீசர் வெளியானது :


சர்தார் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.  முதலில் இந்த டீசர் நாளை பொன்னியின் செல்வன் படம் ரிலீஸின்போது இடைவெளியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் தற்போது சர்தார் படத்தின் டீசரை கார்த்தியின் உடன்பிறப்பே வெளியிட்டுள்ளார்.






வெவ்வேறு கதாபாத்திரம்: 


சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "விருமன்" திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் பருத்திவீரன் கெட்டப்பில் மீண்டும் ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஒரு சில கலைஞன் என்பதை நிரூபித்து வருகிறார்.