தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. கடைசியாக இவர் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில் நடித்தும் வருகிறார். சூர்யாவின் 41வது திரைப்படமான இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.




இந்த படத்தில் சூர்யா மீனவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாலாவின் படப்பிடிப்பில் இருந்து சூர்யா அவசரம் அவசரமாக புறப்பட்டு மும்பை சென்றுள்ளார். இது படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை சென்ற சூர்யா அந்தேரி பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சாஜித்நடியாத்வாலாவின் அலுவலகத்திற்கு சென்றார்.






சாஜித்நடியாத்வாலா தான் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை காரணமாகவே சூர்யா அவசரம், அவசரமாக மும்பை சென்றதாக கூறப்படுகிறது. சாஜித்நடியாத்வாலதான் இந்தியில் வெற்றி பெற்ற பாகி மற்றும் 83 படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மும்பை சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்த பிறகு மதுரையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்திற்கு கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா மீனவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு, மதுரையில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. மதுரையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு கோவாவிற்கு படக்குழு செல்ல உள்ளது.


சூர்யா நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண