நடிகர்கள் கார்த்தி – அரவிந்த்சாமி இணைந்து நடிக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படம் வரும் 27ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதையடுத்து, படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஹ


கவலை வேண்டாம்:

மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, படங்களின் வசூல் குறித்து பேசினார். நடிகர் சூர்யா பேசியதாவது, “ படத்தை படமாக மட்டும் பாருங்கள். வணிக ரீதியாக அது எவ்வளவு வசூல் செய்தது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். தயவு செய்து அது உங்களுக்கு வேண்டாம். படத்தை கொண்டாட மட்டும் நாம் தயாராக இருப்போம். படத்தை பார்ப்போம். படத்தை விமர்சிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரி படங்கள் அபூர்வமாகத்தான் கிடைக்கும். மெய்யழகனை ரசியுங்கள்.”


இவ்வாறு அவர் பேசினார்.






வசூல் மோதல்:


நடிகர் கார்த்தி – அரவிந்த் சாமி நடிப்பில் மிகவும் இயல்பாக உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். 96 படம் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் பிரேம் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மண்ணில் நடைபெறுவது போல இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.


சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது வசூல் நிலவரம் வெளியாகி அது இணையதளத்தில் பெரிய மோதலை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நடிகரின் படத்தின் வசூலை மற்றொரு நடிகரின் பட வசூல் மிஞ்சியதா? அதே நடிகரின் படத்தின் வசூல் அவரது முந்தைய படத்தின் வசூலை மிஞ்சியதா? என்று இணையத்தில் பெரும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. படத்தை வெற்றி பெற்றதாக காட்டப்படும் போலி கணக்குகள் என்று சில திரை விமர்சகர்கள் இதை விமர்சிக்கின்றனர். இதையே சூர்யா தற்போது மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகிய திரைப்படங்களிலே இதுவரை அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இந்த படமே ஆகும். இந்த படம் மட்டுமின்றி சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், வெற்றி மாறன் இயக்கத்தில் விரைவில் சூர்யா வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.