தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்குப் பிறகு சூர்யா பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதும் முடிந்துள்ள நிலையில், படத்தின் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமலே இருந்தது. 

ரெட்ரோ அவதாரம் எடுத்த சூர்யா!


இந்த நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூர்யா ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.


மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத காரணத்தால், சூர்யாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. சூர்யாவிற்கு ஓடிடியில் ரிலீசான சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் திரையரங்கில் ரிலீசான படங்கள் வெற்றி பெற்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. 

ஆக்ஷன் கலந்த காதல் படம்:


இந்த நிலையில், முழுக்க முழுக்க ஆக்ஷன் காதல் கலந்த படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது. கோவாவில் நடக்கும் கதைக்களத்தில் ரெட்ரோ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இவர்களுடன் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், ப்ரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல நடிகை ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். 


படத்தின் டீசரிலே சூர்யா மிகவும் கோபக்காரன இளைஞராக நடித்துள்ளார். அவரது காதல் மனைவியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷபிக் முகமது அலி எடிட்டிங் செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


கங்குவா படம் தோல்வி அடைந்தததால் ரெட்ரோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சூர்யா ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்திற்கு பிறகு சூர்யா நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.