விழுப்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வீடிற்ககு நேரில் சென்று சூர்யா மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.


விழுப்புரத்தில் கடந்த ஆறாம் தேதி மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற விழுப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியருமாண மணிகண்டன் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏழாம் தேதி மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


 






மலர் தூவி மரியாதை


இந்நிலையில் உயிரிழந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா, மணிகண்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா நிதி உதவியும் வழங்கியுள்ளார். உயிரிழந்த ரசிகர் மன்ற மாவட்ட தலைவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதி உதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.