சூர்யா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக சூர்யா  ஆந்திரா , தமிழ்நாடு, டெல்லி , மும்பை என அனைத்து மாநிலங்களிலும் ப்ரோமோஷன் செய்து வருகிறார். சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் சமீபத்தில் வெளியானது . அக்‌ஷய் குமார் இந்த படத்தில் நடித்திருந்தார். தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2D என்டர்டெயின்மெண்ட் சார்பாக இப்படத்தைத் தயாரித்தார் சூர்யா. அதே நேரம் தனது மனைவி மகன் மகளுடன் சூர்யா மும்பைக்கும் குடிபெயர்ந்தார். திடீரென்று சூர்யா மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து பல கேள்விகள் எழுந்தன. தற்போது இந்த கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.


மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து சூர்யா


" தனது 18 வயதில் ஜோதிகா சென்னைக்கு குடிபெயர்ந்தார். அடுத்த 27 ஆண்டுகள் சென்னையில் எனக்காக என் குடும்பத்துடன் இருந்தார். தனது நண்பர்கள், தனது பெற்றோர்கள் எல்லாத்தையும் விட்டு எனக்கா அவர் சென்னை வந்து இருந்தார் . ஒரு ஆணுக்கு என்னவெல்லாம் தேவையோ அது எல்லாமும் ஒரு பெண்ணுக்கும் தேவை. இந்த விஷயத்தை நான் ரொம்ப தாமதமாக தான் புரிந்துகொண்டேன். அவருக்கு அவருடைய குடும்பத்துடன் இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் வேண்டும். அவருக்கான தனிப்பட்ட நேரம் வேண்டும். ஏன் அதை எல்லாம் அவரிடம் இருந்து பறிக்க வேண்டும். ஏன் எல்லாமே எப்போதும் என்னைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். நாம் எப்போது அந்த மாற்றத்தை செய்யப்போகிறோம். இங்கு என் குழந்தைகளுக்கும் நல்ல கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன . தற்போது நான் சென்னை மற்றும் மும்பையில் மாற்றி மாற்றி இருந்து வருகிறேன். மாதத்தில் 10 நாள் எந்த வேலையும் செய்யாமல் என் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறேன். மீதி 20 நாட்கள் இரவுப்பகலாக கடுமையாக உழைக்கிறேன். என் மகளுடன் ஐஸ்கிரீம் சாப்பிடவும் மகனுடன் பாஸ்கெட் பால் விளையாடவும் நேரம் செலவிடுவது எனக்கு பிடித்திருக்கிறது." என சூர்யா தெரிவித்துள்ளார்