சூர்யா என்ற மூன்று எழுத்து பெயரே போதும், அறிமுக எதுவும் தேவையில்லை இவரை அறியாதோர் யாரும் இல்லை. கோள் ஊன்றி கோலிவுட்டை ஆளும் இந்த நாயகனின் ரீல் நேம் சூர்யா. ஆனால் இவரின் ரியல் நேம் சரவணன் சிவகுமார்.
இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்தாலும் உலகில் உள்ள மற்ற சினிமா ப்ரியர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. திரைப்பட உலகில் கால் தடம் பதிக்கும் முன், ஆடை ஏற்றுமதி செய்யும் ஆலையில் வேலை பார்த்துள்ளார். அதுவும் இவர் வாங்கிய சம்பளத்தை பற்றி அறிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.சூர்யாவின் அப்பா, அவர்கள் யார் அவர்களின் சமூக அந்தஸ்து என்ன என்பது போன்ற உண்மைகளை சொன்னது கிடையாதாம். அவர் தந்தை ஒரு சினிமா நடிகர் என்று தெரியாமல் வளர்ந்து இருக்கிறார் சூர்யா. பின்னர் வளர வளரதான் உண்மைகளை உணர்ந்து இருக்கிறார்.
நேர்காணல் ஒன்றில், “ எனது அப்பா போல் நானும் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசையில்லை. ஆடை ஏற்றுமதி வேலை செய்த நான் என் முதல் மாத சம்பளமாக 736 ரூபாயை பெற்றேன், அதுவும் ஒருநாளில் 18 மணி நேரம் உழைத்து அந்த சம்பளத்தை பெற்று கொண்டேன்” என்று சூர்யா தன் முதல் மாத சம்பளத்தை குறித்து பேசினார்.
பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், தனது சொந்த உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் வெற்றிக்கனியை ருசித்தவர் சூர்யா. முதன்முதலாக இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ’நேருக்கு நேர்’ படத்தில் நடித்து அறிமுகமானார். ஒரு தலைசிறந்த நடிகன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிறார் சூர்யா. 25 வருடங்களில் 50 படங்கள் நடித்த சூர்யா எண்ணற்ற விருதுகளையும், உண்மையான ரசிகர்களையும் பெற்றுக்கொண்டார்.
சமீபத்தில், சூரரைப் போற்று திரைப்படம் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அந்த விருதினை இவரும் இவர் மனைவியுமான ஜோதிகா குடியரசு தலைவரிடம் இருந்து பெற்று கொண்டனர். தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. குடும்ப புகைப்படத்தை ஷேர் செய்த இவர், இந்த விருதினை என் அன்பான ரசிகர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குநர் சுதா கொங்கராவிற்கும் அவர் நன்றியினை தெரிவித்து கொண்டார்.