மேலும் அறிய

Karuppu: கருப்பு எனும் நெருப்பு.. சுத்தி சுத்தி பாசிட்டிவ் ரிவியூ! சூர்யா ரசிகர்கள் படுகுஷி!

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் சூர்யா. விஜய் மற்றும் அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா. இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கருப்பு. கடந்தாண்டே ரிலீசாக வேண்டிய இந்த படம் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 

கருப்பு காட்டில் வசூல் மழை:

இந்த சூழலில், இன்று இந்த படம் ரிலீசாகியுள்ளது. பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களே வருவதால் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மிகவும் திறமைவாய்ந்த நடிகரான சூர்யாவிற்கு  சிங்கம் 2 படத்திற்கு பிறகு திரையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக எதுவுமே அமையவில்லை. அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு அவர் எதிர்பார்த்த என்ஜிகே, எதற்கும் துணிந்தவன், காப்பான் போன்ற படங்கள் கம்பேக் தரும் அளவிற்கு வெற்றியைத் தரவில்லை. 

சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி:

ஓடிடி-யில் வெளியாகி சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படமும் தோல்வி அடைந்ததால் சூர்யா ரசிகர்கள் அவரது கம்பேக்கிற்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்த சூழலில், இன்று வெளியாகியுள்ள கருப்பு படத்திற்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவிற்கு திரையரங்கில் வெற்றி கிடைத்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களுக்கான காட்சிகளும் திரையரங்கில் நிரம்பி வருகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

நட்சத்திர பட்டாளங்கள்:

சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். நட்ராஜ், சுவாசிகா, சுப்ரித் ரெட்டி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்த படத்தை கார்த்திக், த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து ரசித்தனர். குடும்ப கதையாக ஆக்ஷன் படமாக அமைந்துள்ள இந்த படம் குறைந்த பட்ஜெட்டிலும் தயாரிக்கப்பட்டு இருப்பதால் வசூலையும் குவிக்கும் என்று கூறப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Mysskin: நடிகையின் காலில் விழுந்த இயக்குநர் மிஷ்கின்.. பட விழாவில் அதிர்ச்சி சம்பவம்.. என்ன காரணம்?
Mysskin: நடிகையின் காலில் விழுந்த இயக்குநர் மிஷ்கின்.. பட விழாவில் அதிர்ச்சி சம்பவம்.. என்ன காரணம்?
என்மீது புதிய வழக்கு...ஆர்.எஸ்.எஸ் காரன் கூட இவ்வளவு கீழ்தரமா நடந்துக்கமாட்டான்..ஜூலி வீடியோ
என்மீது புதிய வழக்கு...ஆர்.எஸ்.எஸ் காரன் கூட இவ்வளவு கீழ்தரமா நடந்துக்கமாட்டான்..ஜூலி வீடியோ
ரஜினிக்கு விஜய் மீது பொறாமையா? அவர் ஏற்கனவே ஒரு தலைவர்..லதா ரஜினிகாந்த் அதிரடி பேச்சு
ரஜினிக்கு விஜய் மீது பொறாமையா? அவர் ஏற்கனவே ஒரு தலைவர்..லதா ரஜினிகாந்த் அதிரடி பேச்சு
பரிசு கொடுத்த காரில் ரைட் கூப்பிட்டு போன சூர்யா..ஆர் ஜே பாலாஜி ஒரே குஷி
பரிசு கொடுத்த காரில் ரைட் கூப்பிட்டு போன சூர்யா..ஆர் ஜே பாலாஜி ஒரே குஷி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: இதுவாவது உண்மையா.? அடுத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்; பாக். பிரதமர் தகவல்
இதுவாவது உண்மையா.? அடுத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்; பாக். பிரதமர் தகவல்
Rajinikanth: பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
ஆவின் பச்சை பால் ரத்தா.. யாரை ஏமாற்றுகிறது தவெக அரசு? அண்ணாமலை சரமாரிக் கேள்வி
ஆவின் பச்சை பால் ரத்தா.. யாரை ஏமாற்றுகிறது தவெக அரசு? அண்ணாமலை சரமாரிக் கேள்வி
பள்ளிகளில் நாத்திக கொள்கைகளா? தமிழக மக்களோடு விளையாட வேணாம்- தவெக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை!
பள்ளிகளில் நாத்திக கொள்கைகளா? தமிழக மக்களோடு விளையாட வேணாம்- தவெக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை!
Time to Lead : ’அதிமுகவை கைப்பற்றும் டிடிவி தினகரன்’ பொதுச்செயலாளர் ஆகிறாரா..?
’அதிமுகவை கைப்பற்றும் TTV தினகரன்’ பொதுச்செயலாளர் ?
Duraimurugan : ’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?
‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ வெளியேறும் வைகோ..?
Embed widget