தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். சுமார் இரண்டு ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


காட்டு யானை:


700 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களமாக மிகவும் வித்தியாசமான வகையில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர், டீசர், ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கங்குவா படத்தின் 3 டி ட்ரெயிலர்  வெளியிடப்பட்டது.






இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “ ஒரு விஷயம். ரசிகர்களுக்கு நான் உறுதியாக சொல்வேன். என்னைக்குமே காட்டுக்குள்ள இருக்குறப்ப யானையோட பலம் வேற. அந்த யானையை கோயில் பணிக்கு கொண்டு வரும்போது அதே காட்டு யானைதான் அதே பலம்தான். ஆனால், பக்கத்துல இருந்து தொட்டுப்பாப்போம். செல்ஃபி எடுப்போம். யானையும் வாழ்த்தும், அதுனால யானையோட பலம் போயிடுச்சுனு அர்த்தம் இல்ல. அந்த காட்டு யானையோட பலத்தை 14ம் தேதி பாப்பீங்க. தமிழ் சினிமாவுல பான் இந்தியாவா ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் இருந்துகிட்டே வருது”


இவ்வாறு அவர் பேசினார்.

11,500 தியேட்டர்களில் ரிலீஸ்: 


சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, ஆராஷ் ஷா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கங்குவா படம் உலகெங்கிலும் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ரிலீசாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களிலே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக இந்த படம் அமைந்துள்ளது.


தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆகிய மொழிகளிலும் கங்குவா ரிலீசாகிறது. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை நிஷாத் யூசூப் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ ஸ்கிரீன் நிறுவனத்துடன் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் சூர்யா கங்குவா மற்றும் ப்ரான்ஸிஸ் என்ற இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கங்குவா படம் 3 டியிலும் ரிலீசாகிறது.