சினிமாவில் வரும் ஹீரோக்கள் படத்திற்கு படம் தன்னுடைய தோற்றத்தை மாற்றி கொள்வதும் உடல் எடையை ஏற்றுவதும் இறக்குவதுமாக பல வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மாற்றுவதும் வழக்கமான ஒன்றுதான். அதில் ஒரு ஸ்டைல் தான் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் பிட்டாக வைத்து கொள்வது. அப்படி கடுமையாக முயற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்து நடித்த நடிகர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா.
வாரணம் ஆயிரம் படத்திற்காக சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடித்தது அந்த சமயத்தில் பெரிய ட்ரெண்ட்டாக மாறியது. அப்படி தன்னுடைய உடல் அமைப்பை சிக்ஸ் பேக் லெவலுக்கு கொண்டு வருவதற்கு நடிகர் சூர்யா என்ன பயிற்சி, டயட் கட்டுப்பாடுகளை எல்லாம் மேற்கொண்டார். அதை முயற்சி செய்வது நல்லதா? இப்படி அது குறித்த பல தகவல்களை அவர் தந்த பிளாஷ் பேக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
”டயட் மிகவும் முக்கியமானதுதான். பால் சார்ந்த பொருட்கள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், குறைவான அளவு உப்புதான் எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரியும் மிக அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்காக கெட்ட கொழுப்பை எரிக்கக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது. நான் அதுபோல செய்யவில்லை. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. இரண்டு மூன்றுமுறை முயற்சி செய்து நான் கைவிட்டு இருக்கேன். அது கொஞ்சம் கடினமானது தான். அதற்கான மாத்திரை உபயோகப்படுத்தாமல் முயற்சி செய்தாலும் அது ஆரோக்கியமானது கிடையாது.
என்னை பொறுத்தவரையில் தினமும் உயர்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது. உங்களின் ஆசைக்காக ஒரு முறை வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். ஆனால் ஆண்டுதோறும் அதை பின்பற்றுவது மிகவும் கடினமானது. நான் படத்தில் இருந்த ஒரு கேரெக்டருக்காக அப்படி செய்தேன்.
சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள அனைவருமே விரும்புவார்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அதற்காக உங்களுடைய லைஃப் ஸ்டைல், உணவு பழக்கவழக்கம் அனைத்தையுமே மாற்றிக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கொழுப்பின் அளவு 6 முதல் 7 சதவிகிதம் இருக்க வேண்டும். அதுவே எனக்கு 4.5 அளவுக்கு குறைந்தது. அது நல்லது கிடையாது. நான் மிகவும் வீக்காகி விட்டேன். என்னுடைய பற்கள் ஈறுகள் வலு இழந்தது. படத்திற்காக தான் சிக்ஸ் பேக் வைத்தேன். இதற்கு பிறகும் நீங்கள் சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என விரும்பினால் நான் சொன்னதை எல்லாம் பின்பற்றுங்கள். ஏராளமான ஒர்க் அவுட், கார்டியோ இப்படி பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்றபடி அது மாறுபடும். ஆனால் தகுந்த உணவு வல்லுநரின் உதவியோடு தான் இதை முயற்சி செய்ய வேண்டும்” என பேசி இருந்தார் நடிகர் சூர்யா.