சூர்யாவின் சீன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த நஸ்லென் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.  இந்த நிலையில் சூர்யா தனக்கு கைகடிகாரம் ஒன்று பரிசாக வழங்கியதை நஸ்லென் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்

Continues below advertisement

மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த சீன் திரைப்படம் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கருப்பு , விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டின் மூன்றாவது ப்ளாக்பஸ்டர் வெற்றியை சூர்யா கொடுத்துள்ளார். உலகளவில் சீன் திரைப்படம் ரூ250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

சீன் திரைப்படம் சூர்யாவுக்கு மட்டுமின்றி இன்னும் சில நடிகர்களுக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது . அந்த வகையில் பல வருடங்களுக்குப் பின் நஸ்ரியா மீண்டும் தமிழில் இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தள்ளார். அதே நேரம் மலையாள நடிகர் நஸ்லென் இப்படத்தின் மூலம் தமிழில்  ஒரு சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக பிரேமலு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்திருந்தாலும் சீன் திரைப்படத்தில் அவரது நடிப்பு சூர்யாவுக்கே சவால் விடும் விதமாக இருந்தது பலரை கவர்ந்துள்ளது. 

Continues below advertisement

சூர்யா பரிசளித்த வாட்ச் 

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் நஸ்லென் சூர்யா தனக்கு கை கடிகாரம் பரிசளித்த தகவலை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில் " எனக்கு எப்போதுமே ஒரு நல்ல வாட்ச் வைத்திருக்க வேண்டும், நல்ல ஷூ அணிய வேண்டும், அழகாக உடை அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வாட்சை எனக்கு சூர்யா அண்ணா பரிசாகக் கொடுத்தார். இதைப் பற்றி ஒரு மேடையில் பேசுவதற்கு சரியான தருணத்திற்காகக் காத்திருந்தேன். அந்த நேரத்தில் நீங்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்டது மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது" என்று கூறினார். 

சூர்யா நஸ்லெனுக்கு அளித்தது வாட்ச் பிராண்டில் முன்னோடியான கார்டியர் பிராண்ட் . இந்த வாட்ச்  ரூ4 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை விற்பனையாகிறது.

யார் இந்த நஸ்லென் ?

மலையாளத் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் நஸ்லென் கே. கஃபூர்  கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தண்ணீர் மாதன் தினங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குருதி, ஹோம், சூப்பர் சரண்யா, ஜோ அண்ட் ஜோ, நெய்மர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தில் சச்சின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அலப்புழா ஜிம்கானா, லோகா: சாப்டர் 1 - சந்திரா உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் பான் இந்திய வெற்றிபெற்றன.