ரசிகர்களாகிய நீங்கள் இருப்பதால் தான் என்னுடைய சினிமா பயணம் அழகாக போய் கொண்டிருக்கிறது என கருப்பு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “கருப்பு”. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, சுவாசிகா, நட்டி சுப்பிரமணியம், இந்திரன்ஸ், ஷிவதா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தள்ளிப் போய் கொண்டிருந்த இந்த படம் மே 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் கருப்பு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இதில் பேசிய நடிகர் சூர்யா, “இந்த படத்துல நா ஹீரோ இல்ல, கருப்புசாமி தான் ஹீரோ.  படம் பார்த்தவங்க முதல் பாதி எமோஷனலாகவும், இரண்டாம் பாதி தியேட்டர் மொமண்ட்ஸாகவும் இருப்பதாகவும் சொல்றாங்க. நானும் அப்படித்தான் இருக்கும்ன்னு நம்புறேன். மே 14ம் தேதி கருப்பு ரிலீஸாகுது. படத்தோட ரிசல்ட் உங்க கையில தான் இருக்குது. நிச்சயமா உங்களுக்கு கருப்பு படம் பிடிக்கும். தியேட்டரில் பார்ப்போம். டவுள் ஒரு மனிதனுக்குள் வரும்போது ஏற்படும் எஃபெக்டை நிஜமாவே பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கற இடத்துல அதிசயம் கண்டிப்பா நடக்கும். கருப்பு படம் இவ்வளவு தூரம் வந்ததற்கு கடவுள் கருப்பசாமி தான் காரணம் என நினைக்கிறேன். படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பல திறமைகளை கொண்டவர்.  நான் என்னை சூர்யாவாகவே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை இயக்குநராக, நடிகராக, வர்ணனையாளராக பார்க்கிறார். 

Continues below advertisement

என்னோட தம்பிகள், தங்கைகள் நீங்கள் இருப்பதால் தான் என்னுடைய சினிமா பயணம் அழகாக போய் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படமும் வெவ்வேறு அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்று தான் வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறேன். இதை SPOOF என சொல்வார்கள். அதாவது சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக இருக்கும். அப்படித்தான் கருப்பு படத்தை ஆர்.ஜே.பாலாஜி எடுத்திருக்கிறார். 

ட்ரீம் வாரியர் நிறுவனம் என்னை விட அதிகமாக திட்டமிட்டதால் தான் இந்த படத்தை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சி நடக்கக்கூடிய மதுரை எனக்கு எப்பவுமே சூப்பர் ஸ்பெஷல் தான். சாப்பாடு, அரசியல், பெண் தெய்வம் மேல அவங்களோட மரியாதை எல்லாம் எனக்கு பிடிக்கும். மதுரை மண்ணுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் நிறைய படம் இங்கே பண்ணிருக்கேன். 28 வருஷமா என்னை ஒரு ஹீரோவாக வைத்திருப்பது ரசிகர்களாகிய உங்கள் அன்பும், பாசமும் தான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மதுரை சித்திரை திருவிழாவில் 5 லட்சம் பேர் வருவாங்க. அந்த மாதிரி இன்னொரு சித்திரை திருவிழாவா இந்த கருப்பு நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.