கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் தான் ,சென்னை தியாகராய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் டி ஜே ஞானவேலுவும் கலந்து கொண்டார். "அப்போது பேசிய சூர்யா கூறியிருப்பதாவது... 2006 ஆம் ஆண்டு விதைக்கப்பட்ட விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வரும் மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக தொடங்கப்பட்டது தான் அகரம் ஃபவுண்டேஷன். ஆரம்பத்தில் ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடுகிறது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பற்றி அவர்களுக்கு கேள்வி எழுகிறது. பள்ளி படிப்பு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்கையையே இழந்துவிடுகிறார்கள். ஒரு சிறிய 10க்கு 10 அறையில் தொடங்கப்பட்ட அகரம் ஃபவுண்டேஷன் அதன் பிறகு 2 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, என்னுடைய அப்பாவின் இடத்தில் தொடங்கப்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்ததாக கல்லூரியில் சேரும் திட்டம் தான் அகரம் ஃபவுண்டேஷனின் விதை.
அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக இதுவரையில் கிட்டத்தட்ட 5813 மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். தற்போது 2000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இதில் 70 சதவிகிதம் மாணவிகள். 2010 ஆம் ஆண்டும் 100 மாணவர்களுக்கு 10000 விண்ணப்பங்கள் வந்தது. ஆனால், 700 மாணவ, மாண்விகள் படிக்கிறார்கள். இப்பவும் 10000 விண்ணப்பங்கள் வந்து கொண்டு தான இருக்கிறது.
இந்த காலகட்டத்திலும் கூட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இந்த கட்டிடம் நன்கொடையாக வந்த பணத்தின் மூலமாக கட்டியது கிடையாது. என்னுடைய வருமானத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தான் இது. நன்கொடையாக வரும் காசு, பணத்தை மாணவர்களின் படிப்பு செலவுகளுக்கு தான் பயன்படுத்துகிறோம். தன்னார்வலர்களின் தேவையும் நேரமும் தேவைப்படுகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர், மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்தாலும் நேரடியாக அவர்களை பார்க்க முடியவில்லை. 7க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முயற்சித்தும் பலனில்லை. கடைசியாக 10ஆவது தன்னார்வலர் சென்று ஒரு மாணவரை கண்டறிந்தார். அவர் தான் இன்று மருத்துவராக இருக்கிறார்
சொந்தமாக வீடு கட்டிய போது இருக்கும், சந்தோஷத்தை விட இந்த அலுவலகம் திறக்கும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.