மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி...5 ரூபாய் டாக்டர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் சூர்யா!
Suriya 48 : ஜெய் பீம் படத்தைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சூர்யாவின் 48 ஆவது திரைப்படம் ஜெய் பீம் படத்தை இயக்கிய தசெ ஞானவேல் இயக்கவிருப்பதாகவும் சூர்யாவின் ழகரம் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அண்மையில் வெளியான கருப்பு திரைப்படம் சூர்யாவின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ளது. உலகளவில் கருப்பு திரைப்படம் ரூ 300 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது
மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி
தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஒருபக்கம் தனது ரசிகர்களுக்காக கமர்சியலான படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ச்சியாக சமூக அக்கறையுள்ள கதைகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சூர்யா. இதனால் தனது 48 ஆவது படத்திற்காக மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
யார் இந்த 5 ரூபாய் டாக்டர் ?
5 ரூபாய் டாக்டர் என பரவலாக அறியப்பட்ட திருவேங்கடம் வீரராகவனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சூர்யா கதா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் ஏழை மக்களுக்கு வெறும் 2 முதல் 5 ரூபாய் பெற்று மருத்துவம் செய்து பிரபலமாக அறியபப்ட்டவர் தான் இந்த திருவேங்கடம் வீரராகவன் . இவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான் பத்மஶ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞ்சர் சந்துருவின் கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்திருந்தார் . சூரரைப் போற்று திரைப்படம் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்தபடியாக 5 ரூபாய் டாக்டராக சூர்யா நடிக்க இருப்பது பெரியளவில் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















