ஜெயிலர் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஜெயிலர்:
கோலமாவு கோகிலா, டான் , பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருகிறார் இயக்குநர் நெல்சன். நடிகை தமன்னா, மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் மற்றும் ரம்யா கிருஷ்ணன், கிங்ஸ்லி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
கொச்சியில் ரஜினிகாந்த்:
முத்துவேல் பாண்டியன் எனும் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிக்கும் நிலையில், சிறைக்குள் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதையாகவும் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஜெயிலர் படத்தின் ஷூட்டிங், கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஷூட்டிங்குக்காக இயக்குநர் நெல்சன் ம்ற்றும் படக்குழுவினர் உடன் ரஜினிகாந்த் இணைந்து விமான நிலையத்தில் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தற்போது ஜெயிலர் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், கொச்சியில் க்ரீன்மேட் அமைக்கப்பட்டு ரஜினி நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படம் மே மாதம் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் ஜாக்கி ஷெராஃப் உடன் நடிகர் ரஜினிகாந்த் இருந்த காட்சிகள், சிவராஜ் குமார் உடன் ரஜினி பெங்களுருவில் இருக்கும் காட்சிகள், நடிகர் மோகன்லால் உடன் ஜெயிலர் பட தளத்தில் இருக்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளின. அதேபோல் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியை ரஜினி கண்டுகளித்தது, கிரிக்கெட் வீரர்களை அவர் சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Raghav Chadha - Parineeti Chopra dating : சம்திங் ராங்... பரினிதி சோப்ராவுடன் டேட்டிங் செய்யும் எம்.பி... ட்ரெண்டிங்காகும் ரைமிங் பதில்