மதகஜராஜா


இந்த பொங்கல் பண்டிகைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு படங்கள் கேம் சேஞ்சர் மற்றும் விடாமுயற்சி. ஒரு பக்கம்  விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போக , இன்னொரு பக்கம்  கேம் சேஞ்சர் ரிலீஸாகி நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. டம்மியாகியிருக்க வேண்டிய பொங்கலை கொண்டாட்டமாக்கி இருக்கிறது. விஷால் மற்றும் சுந்தர் சி காம்போவில் வெளியாகியுள்ள மதகஜராஜா. சுந்தர் சி , விஷால் , சந்தானம் , விஜய் ஆண்டனி என ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக இந்த காம்போவை பார்த்து கொண்டாடி வருகிறார். வசூல் ரீதியாகவும் மதகஜராஜா திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது. மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர் சி உணர்வுப்பூர்வமாக பேசினார்.


காரில் மயங்கி விழுந்த விஷால்


 " இந்த வெற்றியை நான் விஷாலுக்கு சமர்பிக்கிறேன். யாருமே சொன்னால் நம்ப மாட்டீங்க. விஷாலின் டிரைலர்  எனக்கு ஃபோன் செய்தார். சார் காரில் மயங்கி விடுழ்ந்துவிட்டதாக சொனனர். அவசர அவசரமாக ஓடிப்போய் பார்த்தா ஆறடி உருவம் காரில் மயங்கி விழுந்துகிடந்தார். அதே மாதிரி இந்த படத்தின் போது தன் உடலை வருத்தி அவர் நடித்தது எல்லாம் கொஞ்சம் இல்லை. இந்த படத்தை இப்போ மக்கள் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்றால் விஷால் பட்ட கஷ்டம் அத்தனைக்கு பலன் கிடைத்ததை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். விஷாலுக்கு மார்கெட் இருக்கு ஆனால் இந்த படம் என் தம்பி பெரிய மருந்தாக அமைந்திருக்கிறது. 15 நாட்களுக்கு முன் நாங்கள் பட்ட வேதனை எங்களுக்கு தான் தெரியும். என்னவெல்லாமோ சொன்னாங்க. எல்லாத்தைவிடவும் முக்கியமா தெய்வங்களாகிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." என சுந்தர் சி பேசியுள்ளார்