தமிழ் திரையுலகின் முக்கியமான ஸ்டண்ட் கலைஞரும், நகைச்சுவை நடிகருமானவர் கோதண்டராமன். 65 வயதான இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். சென்னை பெரம்பூரை பூர்வீகமாக கொண்ட இவரது மரணம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோதண்டராமன் மறைவு:

இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் கடைசியாக அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “ கராத்தே, பாக்சிங் எனக்குத் தெரியும். பாடிபில்டரும் நான். என்னைப் பார்த்தவுடனே பாபு மாஸ்டர் என்னை செலக்ட் பண்ணிட்டாரு. இந்தி, தெலுங்கு எல்லாருமே பண்ற மாஸ்டர். என்கூட ஷூட்டிங் வர்றியா? அப்படினாரு.

Continues below advertisement

சந்தானம்தான் பேரு வச்சாரு:

இந்தி படம் பாம்பே போறேன் வர்றியா? என்றார். ஓகே சார். வர்றேன் என்றேன். இந்தி படத்துல நல்லா ஃபைட் பண்ணதால அவருக்கு பிடிச்சுப் போச்சு. இரண்டாவது படம் தெலுங்கு, அது பண்ணிட்டு சென்னை வந்தேன். அடுத்து பெங்காலி படத்துக்கு பண்ணேன். பம்மல் ரவி மாஸ்டர் கூப்பிட்டாரு. சிவாஜி – முரளி சார்கூட ஃபைட். அப்போது முதலே ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டேன்.

நகரம் ஒன்னுல ஃபைட் பண்ணேன். தலைநகரம்ல சீன்ல நடிச்சேன். கலகலப்புல சுந்தர் சி தளபதி தினேஷ், பாவா லட்சுமணன் கூட சேந்து நடிக்க வச்சாரு. பாவா லட்சுமணனுக்கு மண்டை கசாயம்னு வச்சுடலாம். தளபதி தினேஷிக்கு திமிங்கலம்னு வச்சுடலாம். எனக்கு பேய்னு வச்சுடலாம்னு சந்தானம்தான் சொன்னாரு. விஜயகாந்த், விஜய்:

தெறி படத்துல ஓப்பனிங்லயே ஸ்கூல்ல அட்லீ சார் நல்ல சீன் கொடுத்தாரு. விஜய் சார்கூட நிறைய படம் பண்ணிருக்கேன், பிரியமுடன், ஷாஜகான்னு நிறைய படம் பண்ணிருக்கேன். ஒவ்வொரு ஹீரோவும் எங்ககூட பேசும்போது அவ்வளவு சந்தோஷம். நாம கீழே விழும்போது பாத்து பண்ணக்கூடாதா? அப்படினு கேப்பாங்க. எல்லா ஹீரோவும் கேப்பாங்க. விஜயகாந்த் அண்ணன்தான் அப்படி பாத்துக்குவாரு. அவருகூட பண்றப்பதான்  ரொம்ப இவ்ளவோ இருக்கும். விஜயகாந்த் சார்கிட்ட டூப்பே தேவையில்ல.

சரத்குமாரும் நேச்சுரலா பண்ணுவாரு. கம்பீரம் படத்துல அடிபட்டு மூக்கு உடைஞ்சுடுச்சு. ஹாஸ்பிட்டல்ல வந்து சரத்குமார், சுரேஷ் கிருஷ்ணா, கனல் மாஸ்டர் எல்லாம் வந்து பாத்தாரு. விஜய் சார், விஜய் சேதுபதி எல்லாம் பாத்து பண்ணுங்கனு சொல்வாங்க. ஃபைட்டர் இல்லனா நாங்க இல்லனு சொன்ன ஒரே ஆளு விஜய். சாகுறவரை விஜய்யை மறக்கமாட்டேன். அவரை கூப்பிட்டு நாங்க பெருமை சேத்துருக்கோம். ரஜினி, கமல்:

வீட்ல இருக்கவங்க எங்க வேலையைப் பாத்து பயப்படுவாங்க. 20 நாள் ஷூட்டிங் போயிட்டு வர்றப்ப பையன் சின்னப்பையன். 2 வயசுல அவன் கிட்டவே வரல. அப்போ ரொம்ப பயப்படுவாங்க. அடிபட்டப்ப வீட்ல பயப்படுவாங்க. அதுக்காக என்ன பண்ண முடியும். ரஜினிகாந்த் வீட்ல இருக்கவங்க எல்லாம் எப்படி இருக்காங்கனு கேட்டாரு. கமல் சார் தொப்பை இருக்கவும் வயித்துல தலை வச்சு படுத்துகிட்டாரு. அதெல்லாம் ஜாலிதான்”

இவ்வாறு அவர் பேசினார்.