முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமிதரிசனம் செய்வது வழக்கம். இங்கு தங்கத்தேரில் முருகப்பெருமான் பவனி வருவது வழக்கம். இந்த தங்கத் தேரில் முருகன் பவனி வரும்போது அவரது கையில் தங்க வேல் ஒன்று இருக்கும். 

Continues below advertisement

அந்த வேல் குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான டி.ஆர்.ராஜேந்திரன் பேசியதாவது, 

எங்க வீட்டு வேலன்:

"எங்கு வீட்டு வேலன் படம் எடுத்தபோது பால்காவடி பன்னீர்காவடி படம் எடுக்குறேன். திருநீர்மலையிலதான் படம் எடுக்குறேன். அப்போ வெயில் கொளுத்துது. ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக எடுக்குறேன். தெய்வம் எங்க இருக்கிறது என்பதை பாருங்கள்.

Continues below advertisement

சிம்பு பால்காவடி சுத்தி எடுத்து வருவான். அப்போ நான் சொன்னேன், வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குது சிலம்பு. கேமராவுல ரோல் வச்சு கால் தெரியாத மாதிரி பண்றேன். நீ கால்ல சாக்ஸ் போட்டுக்கனு சொன்னேன். செருப்பு போடலனா நீ சூடு தாங்க மாட்ட.

முருகனை நினைக்குறேன்:

என் பையன் அப்போ சொல்றான், அப்போ நீ வெயில்ல சூடு தாங்கிட்டுதானே நிக்குற, உன் கால்ல உன்னால நிக்க முடியுதுல என்றான். நான் முருகனை நினைக்குறேன்டா, நான் தாங்கலாம்டா, நீ சின்னப்பையன், குழந்தை தாங்க முடியாதுடா அப்படினு சொன்னேன். அதுக்கு அந்த முருகன் என்னைத் தாங்க விடுவான்ல, நான் ஆட்றேன்பா என் கால்ல செருப்பே வேண்டாம்பா என்றான்.

எனக்கு மனசு கேக்கல, பக்கத்துல இருந்த குளத்துல இருந்து குடம், குடமா தண்ணி கொண்டு வரச்சொல்லி பசங்களை தரையில ஊத்த சொன்னேன். தண்ணியை ஊத்திவிட்டு அதுல ஆட்றான் ஒரு ரவுண்ட் ட்ராலி போட்டு எடுக்குறேன். சிம்பு ஆட்றான் வெயில் தாங்கல, கீழே ஊத்துன தண்ணி காயுதுங்க, அதையும் மீறி ஆடுனா,

63 பவுன் தங்க வேல்:

அந்த முருகனை நம்பி எங்க வீட்டு வேலன்னு ஆடி ஒரு சாதாரணமாக எடுத்த படம் அத்தனை கோடி. 63 பவுன்ல தங்கத்துல வேல் செஞ்சு கொண்டு போயி திருச்செந்தூர் கோயில்ல கொடுத்தேன். என் பையன் சிலம்பரசன் கையால வச்ச வேல்தான் இன்னைக்கு திருச்செந்தூர்ல தங்கத்தேர் போன எடுத்து வக்குறாங்க. 

அப்படிப்பட்ட அந்த நம்பிக்கையோட சிலம்பரசன் இருந்ததாலதான், இன்று வள்ளலாரிடம் போய் அருள் தேடுகிறான் என்றால், இன்று என் மகன் பொருள் தேடும் இடத்தில் இல்லாமல் அருள் தேடும் இடத்தில் இருக்கிறான் என்றால் அது அந்த முருகன் தந்த அருள்தான் காரணமாக இருக்குமோ? 

இவ்வாறு வியந்து பேசினார். 

டி.ராஜேந்தர் இயக்கத்தில்  1992ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி எங்க வீட்டு வேலன் படம் வெளியானது. இந்த படத்தில் ராஜீவ் - ரேகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இசை, ஒளிப்பதிவை டி.ராஜேந்தரே மேற்கொள்ள படத்தை அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிம்பு இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகராக உலா வருகிறார். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.