Actor Soori: 'கனவுல கூட போலீஸ் ஸ்டேஷன்தான் வருது...' : நிலமோசடி புகாரில் நடிகர் சூரி 4-வது முறையாக ஆஜர்

நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது.

Continues below advertisement

நிலமோசடி தொடர்பான புகாரில் நடிகர் சூரி 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 

Continues below advertisement

வழக்கு விபரம்

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சூரியும், நடிகர் விஷ்ணு விஷாலும் தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.  இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க சூரி திட்டமிட்ட நிலையில் இதுகுறித்து விஷ்ணு விஷாலிடம் கூறியிருக்கிறார். உடனே விஷ்ணு விஷால் தன்னுடைய தந்தையும்,  ஓய்வுபெற்ற டி.ஜி.பியான ரமேஷிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு ரமேஷ் அறிமுகப்படுத்தியதாகக் சொல்லப்படுகிறது. இருவரும் நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. பின்னர் வாங்கிய இடத்துக்கு பாதை இல்லை என்ற விவரம் நடிகர் சூரிக்கு தெரியவர அவர் இதுகுறித்து விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் என மூவரிடமும் முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து இவர்கள் அந்த இடத்தை தாங்களே வாங்கிகொள்வதாக தெரிவித்து 10 லட்சம் முன் பணமாக வழங்கியுள்ளனர்.  மீதமுள்ள பணத்தை ஆண்டுக்கணக்கில் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து ரமேஷ் ஓய்வு பெற்ற நிலையில், அப்போது சூரி  பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பணம் கொடுக்கப்படாததால் காவல்துறை உயரதிகாரிகளிடம் சூரி புகாரளித்தார். 

கோர்ட்டுக்கு சென்ற சூரி

பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது அடையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில்  நிலத்தின் மதிப்பு கோடியை தாண்டியதால் இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்டதோடு, 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்ட நிலையில் ஏற்கனவே 3 முறை நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் இன்று 4வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, பேசுவதற்கு ஒன்றுமில்லை. நில மோசடி வழக்கு விசாரணை போய்க்கிட்டே இருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்தாலே குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷன் போறீங்களான்னு கேக்குறாங்க. நியாயம் கிடைக்கும். காவல்துறையினர், நீதிமன்றத்தை நம்பியிருக்கிறேன் என தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola