உழவன் ஃபவுண்டேசன் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது:-
“உழவன் ஃபவுண்டேசனை தொடங்கியிருக்கிற கார்த்தி ஒரு ஏழை பெண் விவசாயின் பேரன்தான். விவசாயி என்றாலே, எலும்பும் தோலுமாக இருப்பான். துண்டு போட்டிருப்பான் என்பதையும் தாண்டி, இளையதலைதலைமுறை நவீன விவசாயத்தை கையில் எடுத்து தங்களுக்கு தேவையான உணவை தாமே தயாரித்து கொள்வதற்காகத்தான் கார்த்தி இந்த ஃபவுண்டேசனை தொடங்கியிருக்கிறார்.
வீணா போன படிப்பினால் எந்த பயனும் இல்லை. நாம் நிறைய பணம் சம்பாதித்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைகளுக்கு கொடுத்து அவர்களை பணக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். எனது அப்பா நான் 10 வது படித்துக்கொண்டிருந்த போது இறந்து விட்டார்.நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். எனது அப்பா உயிரோடு இருந்து எனது அம்மா இறந்திருந்தால், நான் அனாதையாக ஆகியிருப்பேன்.
காரணம் என்னவென்றால், எந்த அப்பாவினாலும் 10 மாத குழந்தையை எடுத்து வளர்த்துவிட முடியாது. எங்கள் ஊர் சுற்றி அரளிவிதையும், எருக்கஞ்செடியும்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது, அதைக்கொடுத்து என்னைக் கொல்லாமல், கடவுள் கொடுத்த குழந்தையை கொல்ல கூடாது என்று எனது அம்மா நினைத்ததால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே சிவக்குமார் அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து பேசிய சிவக்குமார் பெண்கள்தான் இங்கு கடவுள் என்றார்.
பழம் பெரும் நடிகரான சிவக்குமார் 1965 ஆம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவக்குமார், 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய சிவக்குமார் மேடைகளில் பேசுவது, ஓவியம் வரைதல் உள்ளிட்ட கவனம் செலுத்தி வருகிறார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்