தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.


சிவகார்த்திகேயன்


கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது.


மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடியுள்ளார். இப்படியான நிலையில் தனது பிறந்த நாளை மகிழ்ச்சிகரமான நிகழ்வாக மாற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.