தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் புதுப்படங்கள் வெளியாவது வழக்கம். 2026ம் ஆண்டு கோலிவுட்டின் விருந்தாக விஜய்யின் ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் மோதுகிறது.
பராசக்தி படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் கதாநாயகனும், நடிகருமான சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
செழியன்:
கதையை முழுவதும் படித்த பிறகு இந்த செழியன் என்ற பெயரே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் சே, சே என்று இன்னும் கூப்பிடும்போது இன்னும் சக்திவாய்ந்ததாக இருந்தது.
அந்த கதாபாத்திரம் ஆரம்பிக்கும் விதம், அந்த கதாபாத்திரத்தின் தாக்கம், உணர்வுகள். இந்த கதாபாத்திரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் பொழுதுபோக்குவதற்கான வாய்ப்புகளும் இந்த கதாபாத்திரத்திற்கு இருந்தது.
சக்தி வாய்ந்த படம்:
ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்குச் செல்லும் முன் என்னென்ன காட்சிகள் இருந்ததோ, அதை மட்டும் ஒருமுறை திரைக்கதை விவாதம் இருந்தது. நான் வீட்டில் கூட கூறியிருந்தேன் இந்த மாதிரி நான் படித்திருந்தால் கண்டிப்பாக மருத்துவர் ஆகியிருப்பேன். பொறியியல் படிப்பில் கூட தங்கம் வாங்கியிருப்பேன்.
மாணவர் இயக்கம் எந்தளவு சக்திவாய்ந்தது? என்பதுதான் இந்த படத்தின் கதை. இப்படி ஒரு கதை இருக்கும்போது நாம் ஏன் ஹீரோவாக நடிக்க யோசிக்க வேண்டும்? நம்ம மண் சார்ந்த படம். நம்ம மொழி சார்ந்த படம். என்னென்ன விஷயங்கள் வேண்டுமோ, அனைத்துமே இந்த படத்தில் உள்ளது. அதைத்தாண்டி ஒரு சக்தி வாய்ந்த விஷயம் உள்ளது. தியேட்டரில் பார்க்கும் படமாக இது இருக்கும். எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம் பராசக்தி என்னுடைய 25வது படம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த படத்தை புகழ்பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டாவ்ன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
சுமார் 150 கோடி ரூபாய் 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. பராசக்தி படம் முதலில் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ராணா, தேவ் ராம்நாத், ப்ரித்வி ராஜன், குரு சோமசுந்தரம், பாசில் ஜோசப் ஆகியோரும் நடித்துள்ளனர்.