தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் பாலா. இவருக்கும் இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும் நெருங்கிய நண்பர்கள். 

Continues below advertisement

பாலா - சீமான் நட்பு:

இவர்களது நட்பு குறித்து நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி நிகழ்ச்சி மேடையில் பேசியதாவது,

"இவர்கள் இரண்டு (பாலா, சீமான்) பேசுவதை கேட்டால் ஆத்தாடி தாங்க முடியாது. ஒரு இயக்குனர்கிட்ட வேலை பாக்கலாம். இவனுக்கு ஒன்னு செய்யனுமே ஒரு எண்ணம் இருக்கும். பேனர்ல ஒரு படம் கொடுக்கலாம்.

Continues below advertisement

இவர்கிட்ட (பாலா) வேலை பாத்தேன். இவர் பேனர்லயே முதலில் படம் எடுக்க வச்சாரு. நடிடா அப்படின்னாரு. நான் நடிச்சா யாரு பாக்குறது?னு கேட்டேன். யாரு பாக்குறதுனு எனக்குத் தெரியும்? தாடி மட்டும் வளத்துட்டு வானு சொன்னாரு. 2 வருஷம் நடிச்சோம். போயி அடுத்த படத்துல நடிக்குறேனு சொன்னேன்.

போ, உனக்கு எல்லா பயலும் காசு கொடுப்பாங்க. நல்லா மட்டும் நடி. உடம்பை பாத்துக்கோ. என்கிட்ட வந்தா 2 வருஷம் வேஸ்டாகிடும். அப்படினு சொல்லி அனுப்பி வச்சாரு. இன்னைக்கு வர நல்லா இருக்கேன்."

இவ்வாறு பாலா பற்றி நெகிழ்ச்சியில் பேசினார்.

மேலும், சீமான் பற்றி பேசும்போது, "எங்க அண்ணன்( சீமான்) சொன்னாரு. எப்போடா படம் பண்ணப்போறேனு கேட்டாரு? இவர் வீட்டு மொட்டை மாடியிலதான் உக்காந்து கதை எழுதிட்டு இருந்தேன். கதை கேக்குறியானு சொன்னேன். உன் கதை நல்லாதான் இருக்கும். இதை ராசு மதுரவன் எடுத்துட்டான்.

ரெண்டு பேரு சொல்றேன். நீ போயி கதையை சொல்லு. நல்ல நாள் பாத்து பூஜையை போட்டு படத்தை ஆரம்பிச்சுடுங்க. 4 கோடி ரூபாய் சொல்லிருக்கேனு சொன்னேன். கூட ஒரு ரூபாய் தர சொல்றேன். நீ போய் பண்ணு. யாரு சொல்லுவா? அன்புங்குறது சினிமாவுல எப்படி கிடைக்கும். மிகப்பெரிய உயரத்துல இருக்கவங்கிட்ட கிடைக்கும்போதுதான் இந்த அழுகை. அது கம்மி."

இவ்வாறு அவர் கூறினார்.

பாடம்:

மேலும், "அன்று என்னிடம் காசு இல்லை, படம் இல்லை என்ற எந்த கவலையும் இல்லை. இவர்கள் 2 பேர் இருந்ததால் எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன். இவர்கள் 2 பேர் நட்பு நிறைய பேருக்கு படிப்பாகவும், பாடமாகவும் இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் பாலா - சீமான் நட்பு குறித்து பேசினார்.

சீமான் - பாலா ஆகிய இருவருடன் நெருக்கமாக இருந்த சிங்கம்புலி தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகராக உலா வருகிறார். ரெட், மாயாவி ஆகிய 2 படங்களையும் இயக்கியுள்ளார். நான் கடவுள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு மாயாண்டி குடும்பத்தார், ஈசா, கோரிப்பாளையம், தூங்காநகரம், முத்துக்கு முத்தாக, அரவாண், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, காவியத் தலைவன், வெள்ளைக்கார துரை என பல படங்களில் நடித்துள்ளார்.