Simbu flop Movies: தமிழ் திரையுலகில் ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்த பல படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டது. 

 

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் கான். த்ரில்லர் கதையம்சமாக கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், படக்குழுவுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கான் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

 

இதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் படத்திற்கு பிறகு, அவர் அடுத்ததாக நடிக்க இருந்த படம் கெட்டவன். அதில், சந்தானம், பிரேம்ஜி என பலர் நடித்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆனால், படத்தில் பல காட்சிகளை சென்சார் போர்டு கட் செய்ததால்,  படம் வெளியாகாமல் நின்றது. இதே வரிசையில் சிம்பு வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு பாதியிலேயே கைவிடப்பட்ட படம் வாலிபன்.  நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாக இருந்த வாலிபன் படம் பட்ஜெட் பிரச்சனையால் நின்றது. 

 

தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் நெல்சன் சிம்புவை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தார். படத்திற்கு பெயர் வேட்டை மன்னன் என வைக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அதே ஃபைனான்ஸ் பிரச்சனையால் நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் ஆக்‌ஷன் படமாக வர இருந்த வேட்டை மன்னன் பாதியிலேயே நின்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

 

இதே போல் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாக இருந்த ஏசி படத்தில் சிம்புவுடன் நடிக்க அசின் கமிட்டாகி இருந்தார். ஆனால் படம் ஆரம்பத்திலேயே டிராப் ஆனது.  இப்படி சிம்புவுக்கு பல படங்கள் டிராப் ஆகி இருந்தாலும்,  வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுத்தது.  மாநாடு படம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்ததால், அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார்.  அடுத்ததாக  சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘பத்து தல’ படம் அவரை பிளாக்பஸ்டர் ஹீரோவாகக் கொண்டாட வைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக தனது 48-வது படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்ற தகவல் சிம்பு மீண்டும் ஒரு நல்ல படப்பை தருவார் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.