தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயின் நடித்த படத்தின் பாடலை பாடும்  பழைய வீடியோ இணையத்தில் மீண்டும் ட்ரெண்டாகி உள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சிலம்பரசன். லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நிலையில் தற்போது மிகப்பெரிய நடிகராக வலம் வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்கம்,பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட நபராகவும் நடிகர் சிலம்பரசன் இருக்கிறார்.


இவன் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் பத்து தல படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு பாகம் 2, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் என பிஸியாக சிலம்பரசன் நடித்து வருகிறார். அதே சமயம் தன் படங்கள் மட்டுமல்லாது பிறரின் படங்களிலும் பாடும் அவரின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. சம்சாரம் சங்கீதம் படத்தில் ‘ஐ எம் எல் லிட்டில் ஸ்டார்’ பாடல் தொடங்கி நடிகர் விஜய் நடித்து இந்த ஆண்டு வெளியான வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் வரை சிம்பு பாடிய பாடல்களின் லிஸ்ட் என்பது மிகப் பெரியது. 






இப்படியான நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிலம்பரசன் விஜய் நடித்த குஷி படத்தில் இடம்பெற்ற மேக்கரினா பாடலை பாடும் பழைய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் குஷி. இந்தப் படத்திற்கு தேவா இசை அமைத்த நிலையில் மேக்கரினா பாடலை தேவன் ஏகாம்பரம் சௌமியா ராவ் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடலில் நடிகை ஷில்பா ஷெட்டி விஜயுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்; ஜன., 5இல் அயலான் ட்ரைலர் ரிலீஸ்